Showing posts with label movie. Show all posts
Showing posts with label movie. Show all posts

Monday, 11 May 2009

தி நைட் அட் தி மியூசியம்-2 பேட்டில் ஆஃப் ஸ்மித்சோனியன்!!


அன்பின் வலை மக்களே! இது ஒரு இன்னும் வெளிவராத ஆங்கிலத்திரைப்படம்!!

பெஞ்சமின் எட்வர்ட் ஸ்டில்லர் என்ற பென் ஸ்டில்லர் நடிக்கும் படம்.

இந்தக்கதை ஸ்மித்சோனியன் இன்ஸ்டியூசனில் நடைபெறுகிறது!! இங்கு உலகின் மிகப்பெரிய மியூஸியம் உள்ளது!!அதாவது 19 மியூஸியங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளன!!, உயிரியல் பூங்கா,9 ஆராய்ச்சிக்கூடங்கள் இதில் உள்ளன. 136 மில்லியன் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன இந்த மியூஸியத்தில் என்றால் பாருங்கள்!! இது அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ளது!!1846 ஆகஸ்ட் 10 ம் தேதி இது தோற்றுவிக்கப்பட்டது!! இந்த மியூசியத்தில் அமேலியா ஏர்ஹார்ட்( படத்தில் அமி ஆடம்ஸ்) அட்லாண்டிக் கடலை கடந்த பழைய விமானமும் உள்ளது!

படத்தில் இந்த மியூஸியத்தின் பாதுகாவலராக பென் ஸ்டில்லர்( படத்தில் லாரி,LARRY) வருகிறார். இந்த மியூஸியத்திலுள்ள கெட்ட சக்தியான எகிப்திய ஃபாரோ காமுன்றா(Kahmunrah, an evil Pharaoh) உயிர் பெறுகிறது!! மந்திரசக்தியால் இந்த மியூஸியத்தில் உள்ள பழைய சிலைகளான தியோடர் ரூஸ்வெல்ட்,டெக்ஸ்டர் ஆகியவையும் புதியவைகளான அல்கபோன், ஜெனரல் கஸ்டர் ஆகியோரும் உயிபெறுகின்றனர்!!இந்தக்குழுக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள்தான் கதை!!

நம் நாயகன் லாரி(பென் ஸ்டில்லர்), அமீலியா ஏர்ஹார்ட்டுடன் காதலும், இருவரும் சேர்ந்து மியூசியத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் கதையின் மீதி!!!

பென் ஸ்டில்லர் அஜித் மற்றும் இந்திய நடிகர்போல் அழகன் அல்ல! காமெடியனாக பல படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இவருடைய படங்கள் $1.95 பில்லியன் சம்பாதித்துள்ளதாம்.

அமீலியா ஏர்ஹார்ட்டாக வரும் அமி ஆடம்ஸ்

கலக்குவார் என நினைக்கிறேன்!! இந்தப்படம் இந்தமாத இறுதியில் திரைக்கு வருகிறது!!

என்ன படித்துவிட்டீர்கள்!!

ஓட்டளிக்க தமிலிஷ்,தமிழ்மணம்!!

தேவா..



NIGHT AT THE MUSEUM 2: BATTLE OF THE SMITHSONIAN: Movie Trailer - Click here for more home videos

Sunday, 10 May 2009

நகுல் சுனைனா காதல்?

காதலில் விழுந்தேன் என்ற படம் தாறுமாறாக ஓடி நகுல் என்ற அசத்தல் ஹீரோவை முதல் படத்திலேயே பிரபலமாக்கியது!!

அந்தப்படத்தில் சுனைனா நகுலின் ஜோடியாக நடித்திருந்தார்!!

ஃபார்முலா திருடர்கள் அதிகம் உள்ள நம் கோலிவுட்டில் விடுவான்களா? ரெண்டு பேரையும் புக் பண்ணி அதே மாதிரி கதையை செட் பண்ணி மாசிலாமணின்னு புதுப்படம் ரெடிபண்ணிவிட்டார் ”கல்பாத்தி அகோரம்”.

ஃபார்முலாப்படி ரெண்டு பாட்டு ஸ்விஸில்!! கதை என்னவா? கலாஷேத்திராவில் படிக்கும் பணக்கார சுனைனாவை சராசரிக்கும் கீழே உள்ள குடும்பத்தை சேர்ந்த நகுல் காதலிக்கிறாராம். காதலிக்கிறவரைக் கைப்பிடிப்பதுதான் கதை!!  ஒன்னு சாகனும்!! இல்லாட்டி சேரனும் !! கதை எவ்வளவு சிம்பிள் பார்த்தீங்களா?மாசிலாமணி பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர்.

இந்த வாய்ப்பை சுனைனாவுக்கு வாங்கி கொடுத்ததே நகுல்தான் என்று கோலிவுட் பட்சிகள் கூவுதுங்கோ!!வழக்கம்போல “சுனைனா நல்ல நண்பர்” என்கிறார் நகுல்!!( சுனைனா நைனாவுக்குத் தெரியுமா? கண்ணு).  நான் லவ் பண்ணுவது என்னுடைய கேரியரைத்தான் (டிபன் கேரியரா?) . இப்ப்த்தான் வளர்ந்துவருகிறேன்!! நோ டூ லவ் என்கிறார்!! பார்ப்போமே!!

சில ஸ்டில்ஸ்: மாசிலாமணி

 

http://www.chennai365.com/news/masilamani-movie-photo-gallery-2/ படங்கள் பதிவேற்றினாலும் பதிவில் வில்லை ஆகையால் லின்கில் பார்த்து மகிழவும்!!பாத்தாச்சா?

ஓட்டிடுக!! தமிலிஷ், தமிழ்மணம்!!

Friday, 24 April 2009

இங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா!!

 

 

இளையராஜாவின் இசையில்தான் நாம் மயங்கி இருக்கிறோம். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞனின் முகத்தை வெண்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது!!

 

அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கும் இது இன்பச்செய்தியாக இருக்கும்!!

அழகர்மலை என்ற படத்தில் இயக்குனர் ராஜ்குமார் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்!!

சங்கிலிமுருகன் இப்படத்தின் தயாரிப்பாளர்!!

””உலகம் இப்போ”  என்ற பாடலைப் பாடி அந்தப் பாடலுக்கு அவரெ நடித்து உள்ளார்.ராஜா பிறந்து, வளர்ந்த இடங்களில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ராஜாவுக்கு‌ப் பிடித்தமான திருவண்ணாமலை ரமண‌ர் ஆஸ்ரமத்திலும் பாடலை எடுத்திருக்கிறார்கள்.

பாடல் வரிகள்:

”உலகம் இப்போ எங்கே போகுது

எனக்கு இந்த அன்னை பூமி போதும்

இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார்

எனக்கு இந்த சொந்த நாடு போதும்

இந்த மண்ணை விட்டு நான் எங்கே செல்வேன்?”

பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ?

இந்தப்பாடலில் அவர் அன்னையின் சமாதி, அவர் மனைவியுடன் விளையாடிய ஆலமரம், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய இடங்களும் இடம்பெறுகின்றனவாம்!!

Sunday, 12 April 2009

இன்னும் வராத அதிரடி திரைப்படம்!!


அன்பின் நண்பர்களே!!
அடுத்த மாதம் திரைக்கு வரப்போகும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் மென் ஆரிஜின்ஸ் வொல்வரின்” திரைப்படம்!!

சமீபத்தில் அதன் வீடியோ ட்ரைலர் வெளிவந்து “அதிகம் பார்க்கப்பட்ட விடியோவாக உள்ளது!! 

நீங்களும் ரசிக்கவும்!!!