டான் பிரவுன் எழுதிய டா வின்சி கோடு, ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ் ஆகியவை பிரசித்திபெற்றவை. இவற்றில் ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ் தற்போது திரைப்படமாக வெளிவருகிறது! நாவலின் அதே பெயரிலேயே படமும் எடுக்கிறார்கள்!! ”ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (Angels and Demons)” டாவின்சி கோடில் நடக்கும் சம்பவங்களுக்கு முந்தைய பகுதியாகும்(Prequel). இப்புத்தகத்தின் கதாநாயகனும், அதே ராபர்ட் லாங்டன்.
கதை:குறியீடுகள் துறையில் (Symbology) பேராசிரியராக இருக்கும் லாங்டனுக்கு, ஒரு நாள் அதிகாலையில் செர்ன் என்ற அறிவியல் அறிஞர் போன் செய்கிறார். அவர் ஆய்வகத்தில் ஒரு கொலை நடந்ததையும் அதற்கு உதவுமாரும் கோருகிறார்.
பிரேதத்தின் நெஞ்சில் ரகசிய குறியீடு கண்டு அதிர்ச்சி அடைகிறார் லாங்டனுக்கு!
அந்தக் குறியீடு, கிறித்தவ தேவாலயங்களுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் அமைப்பான இல்லுமினாட்டி (Illuminaatti)-யைச் சார்ந்தது. அழிந்து போனதாகக் கருதப்பட்ட இவர்களில் ஒருவன் தற்போது முளைத்திருப்பது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது லாங்க்டனுக்கு!!
லாங்க்டன் உடனே செர்ன் ஆய்வகத்துக்கு விரைகிறார்!ஆன்ட்டி மேட்டர் (anti-matter) என்ற செர்ன்-ன் முக்கியமான விஞ்ஞானி (கொலை செய்யப்பட்டவர்) கண்டுபிடித்த பொருள் இருக்கும் கானிஸ்டரும் (Canister) காணாமல் போயிருக்கிறது. மிகுந்த ஆபத்தானது இந்தப்பொருள்!!
அதே சமயம் வாடிகனில் இப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகத்தகவல் வர செர்ன் அங்கு போகிறார்!!24 மணி நேரத்தில் இது வெடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைக்கிறது! லாங்க்டனும், அதை வடிவமைத்த விஞ்ஞானி மகள் வெட்டோரியாவும்கூட வாடிகன் செல்கின்றனர்.
வாடிகனில் போப்பைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு நடந்துகொண்டு இருக்கிறது.இதற்காக கார்டினல்கள் உலகம் முழுவதிலிருந்து வந்துள்ளனர்! அதிர்ச்சியாக மணிக்கொருவர்வீதம் நான்கு கார்டினல்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார்கள்!!
ஏஞ்செல்ஸ் &டெமான்ஸ் என்று கீழே எழுதி இருக்கும் முறை கொஞ்சம் வித்தியாசமானது! எப்படியென்றால் இதை தலைகீழாக திருப்பிப் படித்தாலும் ஏஞ்செல்ஸ் &டெமான் என்றே வரும்!!
இப்படி எழுதுவதை ஆம்பிகிராம்ஸ் என்று அழைப்பார்கள்!!
நான்கு கார்டினல்களில்ஒருவரின் உடலில் earthமற்றொருவரின் உடலில் airமற்றொருவரின் உடலில் fireமற்றொருவரின் உடலில் waterஎன்று எழுதப்பட்டு இருக்கும்!! அதுவும் ஏஞ்செல்ஸ் & டெமான் எழுதியுள்ள முறையிலேயே!!
கொலையாளி யார் என்று துப்பறிவதே கதை!! இந்தக்கதையையும் கத்தோலிக்க பாதிரிகள் கண்டனம் செய்துள்ளனர்!
இதில் டாம் ஹான்க்ஸ் நடித்து உள்ளார். மே 15 அன்று இந்தப்படம் திரைக்கு வர்கிறது!!இந்தப்படத்தின் பிரிமியர் 5 மே 2009 அன்று ரோமில் நடந்துள்ளது!!மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் இப்படம் உலக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது!!படத்தைப்பார்க்க தயாராவோம் நாமும்!!
படத்தின் ட்ரைலரைப்பார்க்கவும்:
No comments:
Post a Comment