Thursday 2 April 2009

ஆசிரியைகளின் பாலியல் தொல்லை!! ஒரு அதிர்ச்சி தகவல்!

சமீப காலமாக பாலியல் தொடர்பான விபரங்கள் நிறைய பதிவர்கள் போடுகிறார்கள். அவற்றின் மேல் விவாதங்களும் தொடர்ந்து வர்து கொண்டிடுக்கின்றன!

அதனால் ரொம்ப நாள் போட வேண்டாம் எண்ணிய பெண் ஆசிரியைகள் பற்றிய இந்தப் பதிவை தற்போது பதிவிடுகிறேன்.

ஆண் ஆசிரியர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை பெண் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களைக்காப்பதில் காட்டுவது இல்லை. ஏனெனில் அதில் அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. 

ஆண் வாத்தியார்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பது ஒருபுறம் இருக்க, மாணவர்களை ஆசிரியைகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது மேலை நாடுகளில்!

நம் நாட்டில் இதுபோல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருக்கும் வெளியில் தெரியவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

பதிவர்கள் இதுபற்றி கருத்துக்களைக்கூற வேண்டுகிறேன்.

கீழே நான் சேகரித்த பட்டியலைப் பார்க்கவும்!

1.லாரா பேஸ்-  38 வயதுடைய இந்தப் பள்ளி ஆசிரியை 5 குற்றங்களுக்காக (சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக) கைது செய்யப்பட்டார்.

2.நடாலீ ஃப்ராக்ஸிடஸ்- ஸ்பெயின் நாட்டு பாம் பீச்சில் உள்ள சாண்டா க்ளாஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஆன இவர் 18 வயது மாணவனுடன் பாலியல் தொடர்பு வைத்து இருந்தார்.

3.ஜூனின் -இவர் 38 வயது ஆசிரியை, மாணவனுடன் தொடர்ந்து அவரது அபார்ட்மெண்டுக்கு அழைத்துச் சென்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

4.டேனியல் ஜோன்ஸ் இவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியை!! நிறைய மாணவர்களைத்தவறான பாதைக்கு அழைத்துச்சென்று உள்ளார்.

5.சாரா எலிசபெத் - இவர் ஒரு மாணவருடன் மூன்று முறை தவறான செயலில் ஈடுபட்டுள்ளார்.

6. பெண் ஆன் செஸ்டர் 26 வயது உடற்கல்வி ஆசிரியை பிட்ஸ்பர்க்,நிறைய மாணவர்களுடன் உறவு,தன் படங்களை மாணவர்களின் செல்லுக்கு அனுப்புதல் முதலிய குற்றங்கள் செய்துள்ளார்.

 

7.ஜெனிபர் நடுநிலைப்பள்ளி ஆசிரியை, 12 வயது சிறுவனுடன் உறவு, 14 வயது சிறுவனுடன் காரில் இருந்த போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

8.டெப்ரா பேஸ்லி, 14 வயது மாணவனுடன் தவறாக நடந்து உள்ளார்.

9.டெப்ரா லாஃபெவ் நடுநிலைப் பள்ளி ஆசிரியரான இவர்  இரண்டு கோர்ட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தாலும் சிறை செல்லாமல் தப்பித்துவிட்டார்.

10.29 வயது பமீலா, 13 வயது மாணவனுடன் தவறு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

11.மேரி கே, ஆறாம் நிலை மாணவருடன் குழந்தை பெற்றுக்கொண்டு உள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் ”ஒரு தவறு,காதல்” என்று புத்தகம் எழுத இவருக்கு $200000 முன்பணம் அளிக்கப்பட்டு உள்ளது.

பெற்றோர்களாகிய நாம் எப்படி நம் குழந்தைகளை இத்தகைய கொடுமைகளிலிருந்து காப்பாற்றப் போகிறோம் என்பதுதான். பெண் குழந்தைகளின் மேல் செலுத்தும் அதே கவனத்தை ஆண் குழந்தைகளின் மேலும் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் இதில் சில விசயங்கள் கவனிக்க வேண்டியுள்ளது.  

1. ஆசிரியைகளில் பலர்  அவர்கள் செய்தது தவறு என்றே கருதவில்லை.  தவறு செய்ததற்காக  வருத்தப்படவுமில்லை.

2.கேரல் ஷேக்‌ஷஃப்ட் என்ற பேராசிரியர் மத குருக்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாவதைவிட 100 மடங்கு அதிகமாக பள்ளி மாணவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாகக் கூறுகிறார்.

3.இதற்கும் மேல் அமெரிக்க நியூஜெர்ஸி சுப்ரீம்கோர்ட் நீதிபதி புரூஸ் ஏ கேடா 43 வயது ஆசிரியை பமேலா மோர் 13 வயது மாணவனுடன் உறவு கொண்டது தவறல்ல என்று தீர்ப்பளித்து உள்ளார்.

இத்தகைய கொடுமைகளிலிருந்து எப்படி நம் குழந்தைகளைக் காப்பாற்றப் போகிறோம்?

No comments:

Post a Comment