Wednesday 22 April 2009

காசநோய்-T.B.(Tuberculosis)

என் தம்பியின் நண்பன் அவர். வக்கீலுக்குப் படிக்கும் போதே எனக்குப்பழக்கம்! பைக்கில் ஸ்டெயிலாக சுத்துவார்.இதெல்லாம் 10 வருடம் முன்பு!திடீரென்று ஒரு நாள்என் நண்பர் ஒருவர், வக்கீல்ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை! உங்களிடம் அனுப்புகிறேன்! பாருங்கள் என்றார். பார்த்தேன்!எனக்குத்தெரியாத முகம்! என்னைத்தெரியுதா?நான் உங்கள் தம்பியின் வக்கீல் நண்பன் என்றார்! என்னால் நம்ப முடியவில்லை!!எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து,நடக்க முடியாமல் வீல் சேரில் அம்ர்ந்து இருந்தார்! சோதித்ததில் அவருக்கு டி.பி.இருந்ததும்,மருந்துகளை சரியாக உட்கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது!அவரின் அலட்சியப்போக்கால் வியாதி உடலெல்லாம் பரவி இருந்தது.தினமும் என்னைக்காப்பாற்றுங்கள் என்று கேட்பார்.தீவிர சிகிச்சை செய்தும் முடியாமல் 10 நாளில் இறந்தும் போனார்.படித்தவர்களே மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பது கண் இருந்தும் குருடர் போன்றது.சரி T.B. பற்றி..

.

Mycobacterium tuberculosis-காச நோயை உண்டாக்கும் கிருமி!!

T.B. என்று நாம் அழைக்கும் காச நோய் நுரையீரல்களைத்தான் முதலில் தாக்கும்!இருமல்,சளி உடல் எடை குறைதல், பலகீனம் ஆகியவை இதில் வரும்! குழந்தைகளைத்தாக்கும் போது இதனைபிரைமரி காம்ப்ளக்ஸ் என்று சொல்வார்கள்.இது ஒரு நுண்கிருமியால் ஏற்படுகிறது! இது இருமும் போது நுண்சளித்திவலைகளால் பரவுகிறது!இந்த நோய் குழந்தைகள் நோய்தாக்கியவருடன் அருகில் இருக்கும்போதுஅவர்களின் இருமல்,தும்மல்,சளி,எச்சிலுடன் முத்தமிடுதல் ஆகியவற்றால் பரவுகிறது! இந்தியக்குழந்தைகளில் இது அதிகம்!

ஒருவர் தும்மும்போது தெறிக்கும் சளித்திவலைகள்!!

 

ராபர்ட் கோச்- காசநோய் கிருமியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி!!

நடுத்தர வயதினர்,முதியோரைத்தாக்கும் போது கடுமையான இருமல்,வேகமான எடை குறவு மூச்சு விட முடியாமை,மாலையில் காய்ச்சல் காணப்படும்!நெஞ்சு நுண்கதிர்ப்படம் எடுத்தால் நுரையீரல் பாதிப்பை அறியலாம்.சளி சோதனையிலும் கிருமியைக் கண்டுபிடிக்கலாம்! இதற்கு சிகிச்சை ஆறு மாதகாலம் என்னும்போது இந்த நோய் எவ்வளவு கொடியது என்று அறியலாம். ஒரு முறை மருந்தை ஆரம்பித்துவிட்டால் நடுவில் விடாமல் 6 மாதம் சாப்பிட்டு ஆக வேண்டும்! நடுவில் உடல் தேறி நன்றாக இருக்கிறதே என்று இளம் வயதினர்கூட விட்டுவிட்டால் திரும்ப வந்துவிடும்! மறுமுறை வரும் டி.பி. மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படாது! இறக்கும் நோயாளிகளும் அதிகம்! இதற்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலத்தில் நோய் தாக்கி இறந்தவர் --கணிதமேதை ராமானுஜம்!!

No comments:

Post a Comment