Saturday 18 April 2009

இறந்த மகன் வேண்டும் !!


  அன்பு என்பது மிகச்சிறந்த விசயம்!! அதிலும் பெற்ற தாய் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசம் அருமையானது!! ஈடு இணை இல்லாதது!!

நம் நாட்டில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்படித்தான்!!

மகன் இறந்து விட்டான். ஆனால் இறந்த அந்த வாலிபனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை!! அதைத் தன் அம்மாவிடமும் அடிக்கடி கூறியிருக்கிறான்!! அவனுக்கு மூன்று குழந்தைகள் வேண்டும் என்றும் அவர்களுக்கு ஹண்டர்,வான்,டாட் என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் தன் தாயுடன் பேசும் பல சமயங்களில் சொல்லி இருக்கிறான்!

இறந்த நிக்கோலஸ் ஈவான்ஸ்!!

எதிர்பாராத ஒரு நிகழ்வில் அவனுக்கு  தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது!!

கோமா நிலையில் இருக்கிறான்!! ”ப்ரெய்ன் டெத்” என்போமே அதுபோல!

அம்மா தன் மகன் பிழைக்கமாட்டான் என்பது தெரிந்தவுடன் அவனுடைய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதிக்க்கிறார்..

ஆனாலும் மகன் மேல் கொள்ளை ஆசை அவருக்கு! அந்த மகன் எந்த ரூபத்திலாவது வேண்டும் என்று ஆசைப் படுகிறார்!!

பல உறுப்புகளை இவர் சம்மத்தித்து தானம் செய்வது போல் தனக்கு தன் மகனின் விந்துஅணு தேவை!! அதை வைத்து செயற்கைக் கரு உண்டாக்கி ஏதாவது வாடகைத்தாயின் வயிற்றில் தன் மகனின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார்!!

இப்படி ஒரு விநோதமான நிகழ்ச்சி டெக்சாஸ்,அமெரிக்காவில்  !! ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? இதற்கு முன் இப்படி ஒரு பிரச்சினையை சட்டத்துறைகூட சந்தித்ததில்லையாம்!!

ஆகவே உயிர் அணுக்களை பெற்றோரிடம் கொடுக்கலாமா கூடாதா என்று சட்டத்துறை நிபுணர்கள் ஆராய்ந்தனர்!!அப்படி உயிரணுக்களை எடுக்க வேண்டுமானால் 24 மணி நேரத்தில் எடுக்க வேண்டும்!! அதை எடுக்கும் வரை குறிப்பிட்ட நபரின் உடல் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்

மகனின் முக்கிய உறுப்புகளை தானம் செய்ய பெற்ற தாய்க்கு உரிமை இருக்கும்போது அவருடைய உணர்ச்சிகளை மதிக்கவேண்டும் என்றும் தவறாகப் பயன்படுத்தாத போது அவருடைய தாய்மை உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து அவருடைய மகனின் உயிர் அணுக்களை கொடுப்பது தவறில்லை என்று நீதிபதியால் முடிவு செய்யப்பட்டது!!

எவ்வளவு மனிதாபிமானத்துடன் நீதிபதி உடனடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் பாருங்கள்!!!

ஒரு தாயின் பாசம் இறுதியில் வென்றது!! அறிவியல் முன்னேற்றம் அன்புக்காக நல்ல வழியில் பயன்படுத்தப் படுவது சந்தோசம்தான்!!!

பிடித்திருந்தால் போடுக வாக்குகளை தமிலிஷ்,தமிழ்மணம் இரண்டிலும்!!

No comments:

Post a Comment