Friday, 3 April 2009

அன்புடன் ஜமாலும் ,அதிர்ஷ்ட தோனியும்!!!

image

இந்தியா தன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது!!

கடைசி மாட்சின் இரண்டாம் நாளிலேயே 379 முதல் இன்னிங்க்ஸ் முடிந்து தேனீர் இடைவேளையில் 144 ரன் மட்டுமே எடுத்து உள்ளது நியூஸிலாந்து.

என்னங்க, ஜாகீர்கான் பின்னிப் பெடல் எடுக்கிறான்..ஹர்பஜன் சிங்கின் டீக்கு முந்திய கடைசி ஓவரில் 4 முறை எல்.பி அப்பீல்!!

மெக்கெல்லம் மட்டும்தான் நியூஸிலாந்தின் ”கிரிக்கெட்குடிதாங்கி”யா நின்னு ஆடிக்கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் நிதானம் தவறினால் முடிந்தது கதை!

பார்ப்போம் ! தோனி பெரும்பாலும் கைநழுவும் மேட்சுகளையே காப்பாற்றும் ஆபத்பாந்தவன்! கடைசி தோற்க வேண்டிய மாட்ச்சையே ஒரு மாதிரி ட்ரா செய்தாகி விட்டது!

தோனிக்கும் அதிர்ஷட தேவதைக்கும் லவ்வு!

தோனிக்கு அதிர்ஷ்டம் என்றால் பலர் இல்லையில்லை சுத்தமான அக்மார்க் திறமை என்று பேட்டைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். நமக்கெதுக்கு வம்பு!!

தாடி எடுத்த வெட்டோரி நிலைமை புரியாமல் இஷாந்தின் பவுண்ஸரை தொட்டுக்கொண்டு இருந்தார். ஒருநாள் ஆட்டம் போல ஆடினா விடுவோமா. முடிந்தது வெட்டோரியின் கதை!!

ஜமால்!

இதெல்லாம் இருக்க நம் அன்பு ஜமால் பதிவுலகின் புதிய மொக்கைப் பேரரசர் ஆகியுள்ளார்.

ஆமாங்க 10 வரி எழுதாமல் 10000 பின்னூட்டம் வாங்கியுள்ளார்.

மொக்கைப் பேரரசனின் அன்பு பதிவுலகமெல்லாம் வழிந்து ஓடுகிறது..

வாழ்த்துக்கள் ஜமால்!!

ஜமால்!! இந்த சுட்டியைத் தட்டி ஜமாலில் தளம் செல்லவும்!!

இதை நான் எழுதி முடிக்கும்போது இந்தியா 8 வது விக்கெட்டைத்தூக்கி விட்டது. நியூஸிலாந்து 167/8..

மெக்கெல்லத்தை ஹர்பஜன் தூக்கிட்டருங்கோ!!181/9!!

கணக்கு சரியா வருதா?

ஒகே ஒட்டு தமிலிஷிலும்,தமிழ்மணத்திலும் போடுங்க!!

No comments:

Post a Comment