Wednesday 15 April 2009

விடை பெறுகிறேன்!! வணக்கம்!!

அன்பு வலை நண்பர்களே!

விளையாட்டுப்போல 22 நவம்பரில் ஆரம்பித்தது என் வலைப் பயணம்.

தமிழில் எழுதமுடியாமல் கஷ்டப்பட்டு, பல மென்பொருட்களை தரவிறக்கம் செய்து வலையில் தமிழ் எழுத போராடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்!!

அதே சமயம் தமிழ்மணத்தில் சேர்க்கமுடியாமல் கஷ்டபட்டது தனி கதை!! இப்போதும் என் டெம்ப்ளேட்டில் எதை அழித்தேன்! எதை சேர்த்தேன் என்று தெரியவில்லை!! என் எக்ஸ். எம். எல் கோடுகளில் நிறைய பிழைகள் உள்ளன!!

அதன் பின் அறைக்குள் வந்த( ஆப்பிரிக்க) வானம்(கவிதைத் தொகுதி),  போல் என் அறைக்குள்ளேயே என் படைப்புகளை வலையில் பிரசுரம் செய்ய முடிந்தது! கையில் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்க வேண்டும் என்றால் என்னால் எதுவுமே எழுதியிருக்க முடியாது!!உண்மை!!

எழுதியவற்றுக்கு கருத்துக்களும், பின்னூட்டங்களுமாய் வலையில் மேலும் மேலும் எழுதும் போதை ஏற்பட்டது!! உண்மையில் வலையில் பின்னூட்டமிடுபவர்கள் என்னை விட பரந்த மனம் கொண்டவர்கள்!! என் பின்னூட்டங்களாவது, கேலி, கிண்டல் என்று சிலரை காயப்படுத்தி இருக்கும், ஆனால் வலை நண்பர்கள் என்னைக் காயப்படுத்தியதே இல்லை!!

அதன் பின் என் பதிவை கெல்வி. நெட் டில் (TAMIL TOP BLOGS) இணைத்தேன்!! அப்போது ஆரம்பித்தது ஒரு ரேஸ்!! பதிவர்களில் யார் அதிகம் ஹிட் பெறுவது என்ற அது செம போதை தரும் ரேஸ்!! தினமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஹிட் எவ்வளவு என்று பதிவு போட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்!!

இதில் நான் பெற்றது நான்காவது இடம்!!

ஆனால் என் அன்றாட நடைமுறை மாற ஆரம்பித்தது.  பொன்னான நேரமெல்லாம் பதிவு போடுவது பற்றியே யோசித்து, சூடான இடுகையில் இவ்வளவு ஹிட் வாங்கியும் போடவில்லையே? ஏன்? என்று குழம்பி, தமிழிஷில் ஹிட் ஆகிவிட்டதா ? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு............ போதும்டா சாமி!!

அமைதியாக நம் நண்பர்களுடன், குடும்பத்தாருடன், எந்த டென்சனும் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்!!!

ஆகையால் விலகுகிறேன்!!! ஆமாம் கெல்வி.நெட். தமிழ் டாப் பிளாகிலிருந்து விடை பெறுகிறேன்!!மனம் நிம்மதியாக உள்ளது!!

மேலே தமிழ் டாப் பிளாக் என்ற சொல் விடுபட்டுவிட்டது!! தமிழ் டாப் பிளாக் கிலிருந்து விலகுகிறேன் என்று படிக்கவும்!!( என்ன இருந்தாலும் நம்ம கிருத்துருவம் நம்மை விடாதே!!! இஃகி!! இஃகி!!!இஃகி!!)

தேவா..

No comments:

Post a Comment