நெறய பேர் தங்களுடைய மதிப்பை தானே அறிவது இல்லை! குறிப்பா பெண்கள்!!
தொடர்ந்து பெண்களுடைய மனசைப்பத்தியே எழுதுற மாதிரி வருது!,
பெண்கள், நான் அவர்களை குறை சொல்லியே எழுதுவதாக எண்ண வேண்டாம்
!!!!!மேல படிங்க!
நான்
கிளினிக்லெ உக்காந்திருந்தேன். ரெகுலரா வரும் ஒரு நோயாளி!! பெரிய
தமிழ்க்கவியுடய பேர் உள்ளவங்க! புருஷனுடன் தகராறு என்று அடிக்கடி வருவார்கள்!!
ட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவேன் அன்று நிலைமை முற்றிப்ப்போய் விட்டது போல
கைல கெடச்ச மாத்திரைகளை அள்ளிப்போட்டு தற்கொலை முயற்சி!!!ரெண்டு நாள்
சிகிச்சை செய்து ஆளை பிழைக்க வச்சாச்சு!! நல்லா உடல் தேறியவுடன்
அந்தப்பெண்ணீடம் " ஏம்மா நல்லா படிச்ச நீங்கள்ளாம் இப்படி பண்ணலாமா?" என்று
கேட்டேன். அதற்கு அவர் வீட்டுக்காரர் என்மேல சந்தேகப்படுறார்! தினம் ஒரே அடி
உதை!!!இனிமே
என்னால தாங்க முடியாதுன்னுதான் இந்த முடிவுக்கு வந்தேன்! என்றார்கள்!!!
உனக்கு குழந்தை இருக்கு, உன்னைய கல்லுரிவரை படிக்கவச்சு செலவு பண்ணி
கல்யாணம் பண்ணிக்கொடுத்த அம்மா,அப்பா, பாசமான அண்ணன் தம்பியெல்லாம்
இருக்காங்க!அவங்களையெல்லாம் ஒரு நிமிடத்தில் மறந்து விட்டாயே அம்மா!
புருஷன் முக்கியம்தான் அவன் சரியில்லை என்பதற்காக நீ ஏம்மா சாகணும்?
புருஷனையும் தாண்டி வாழ்க்கை ஒன்று இருக்கும்மா!!! என்றேன்.என் அப்பா அம்மா
வருவாங்க! அவங்க வரும்போது ரொம்ப அன்பா இருக்கற மாதரி நடிப்பாரு அவங்க
போனவுடனே ரொம்ப டார்ச்சர் பன்னுவார்!!!இவரோட இருக்கவே முடியாது என்று ஒரே
அழுகை!
எல்லாம் ஒகே! புருஷனைத் தவிர வாழ்க்கயே இல்லையா?ன்னு சொல்லி
பெண்கள் புருஷன் இல்லாம எவ்வளவோ சாதிக்கிறாங்க! நீ படிச்ச பெண்,உன்னால
100 பேருக்கு படிப்பு சொல்லித்தர முடியும்! எவ்வளவோ பேருக்கு வாழ வழிகாட்ட
முடியும், உங்க அப்பா,உடன் பிறந்தோர் உதவியோட எவ்வளவோ செய்யலாம்னு
சொல்லி ஒரு கவிதையை காண்பித்தேன்!!!
" தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னம் சிறு கதைகள் பேசி "புகழ் பெற்ற பாரதி
கவிதை!!!
மறு நாள் அவங்க அப்பா அம்மா எல்லாம் வந்தார்கள்!!!
"என்ன டாக்டர் பண்ணலாம்? வீட்டுக்குக்கூட்டிக்கொண்டு போறோம் " என்றார்கள்!!!!
சரியென்று நிறைய சொல்லி அனுப்பிவைத்தேன். டாக்டர் நான் உயிரோட இருக்கேன்னா
நீங்கள் காட்டிய அந்தக்கவிதைதான் டாக்டர்! எனக்கு நல்ல நம்பிக்கையாக இருக்கு!
நான் இனிமேல்
தற்கொலை முயற்சி செய்யமாட்டேன்! என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டுக்குப் போய்
விட்டாள்!
"ஒரு பெண்ணின்மனசை மாற்றி விட்டாய்! இறந்த பிறகும் உன்னால் பல பேர்
வாழ்கின்றார்கள் உண்மையிலேயே நீ மகாகவிதான்!!!" என்று பாரதியாருக்கு
மானசீகமா ஒரு நன்றி
சொன்னேன்!!!
நான்கு மாதம் சென்றது! மீண்டும் அதே பெண் ! இரண்டு மாதம் கர்ப்பமாக
வந்திருந்தாள்!
முகம் ஒரு பக்கம் கன்றி சிவந்து இருந்தது!! கணவன் அடித்ததால் ஏற்பட்ட
காயம்!!! கணவனும் கூட வந்திருந்தான்!
"தடுமாறி விழுந்திட்டேன் டாக்டர்" என்றாள்!!!
நானும் ஒன்றும் கேக்கவில்லை! அவளும் ஒன்றும் சொல்லவில்லை!!!!
இதுக்குமேல் நான் ஒன்னும் உங்களுக்கு சொல்லவும் வேண்டியதில்லை!!!
No comments:
Post a Comment