எல்லோரையும் ஆதரிக்கும் மூத்த பதிவர் , சமீபத்தில் தன்னிடம் தன் மனக்குறையை கூறியதாகக் கூறியதை எழுதியிருந்தார்!
அதாவது உடல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தமிழகத்தில் சரியான மரியாதை தருவதில்லை என்றும், சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார்!!
அதைப்படித்ததில் இருந்து அதைப்பற்றி அவருக்கு விள்க்க வேண்டிய கடமை நம்மில் யாவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தேன்.
அதன் விளைவாகவே இந்த இடுகை!!
அவருடைய உணர்வுகள் உண்மையனவைதான்!! ஏறக்குறைய ஊன்முற்றோர் சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது உண்மைதான்!!
தற்போது உள்ள சூழ்நிலையை நான் கூறுகிறேன்!!!
அவரை மறுத்தோ, அவர் சொன்னது தவறு என்றோ நான் கூற வரவில்லை!!
நான் இன்று காலை 9.00 மணிக்கு உடல் குறைபாடு சான்றிதழ் வழங்கும் முகாமுக்குச் சென்றேன்!! 6.45 வரை அங்கு இருந்து விட்டுத்தான் வந்தேன்! தற்போது அரசு உத்தரவுப்படி கலெக்டர்,தாசில்தார்,RDO, BDO, Revenue inspector, VAO, தலையாரி அனைவரும் வர வேண்டும்! அனைவரும் நான் சொன்ன நேரம் வரை இருக்க வேண்டும்!! முகாம் மாதம் இருமுறை சுழல் முறையில் குறிப்பிட்ட ஊர்களில் நடக்கும்.
இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அங்கேயே , மூன்று சக்கர வண்டிகள்,ஊன்றுகோல்,செயற்கைக்கால்கள்(எனக்கே ஆச்சரியம்) பதியப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டன. பயணர்கள் உடனடியாக ஓட்டியும் செல்கின்றனர்.
இத்தனைக்கும் கொஞ்சம் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் கூட்டிப்போட்டு உதவித்தொகை 400 ரூபாய் மாதம் உடனடியாக வழன்குகிறார்கள்!! இதற்கு அவர்கள் வி.ஏ.ஓ , ஆர்.ஐ, என்று அலைய வேண்டியதில்லை!! அவர்களும் முகாமில் கடைசிவரை அமர்ந்து இருப்பார்கள்!
இதில் யாருக்கும் எந்தப்பணமும் தர வேண்டியது இல்லை!!! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.
மற்றபடி முன்பு போல் அலைய வேண்டியதோ பணம் தர வேண்டியதோ தற்போது இல்லை!!
இந்த செய்தி தமிழகமும் சில விஷயங்களில் முன்னேறித்தான் வருகிறது என்பதை தொல தூர நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்தான்!!!!
தேவா........
No comments:
Post a Comment