Monday 15 December 2008

என் கனவுகள்!!!


            நிறைய பேர் கனவுகளைப்பற்றி எழுதுகிறார்கள்! இளம்வயதில் 

அனைவருக்கும்  கனவுகள் பல விதமாக தொடர்ந்து வரும்!

            பறப்பது போன்ற கனவு வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்!

எனக்கு வந்த இரண்டு கனவுகளைப் பற்றி இங்கு சொல்லலாம் என 

நினைக்கிறேன்.

            ஒன்று என்னுடைய 10 - 15 வயது பருவத்தில் வந்தது.   நான் மெதுவாகப் 

பறப்பது போல இருக்கும். ரொம்ப மெதுவாக!!

           எனக்கு முன் தூரத்தில் நிலவு இருக்கும்! நிலவின் ஒளியில் நான் பறந்து

 கொண்டு இருப்பேன்.
  
           நிலவுக்கும் எனக்கும் இடையில் பின்னப்பட்ட வலை போல வானம் 

முழுக்க இருக்கும்! அந்த வலைகளுக்குள் மிகக்கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக நான் 

செல்வது போல வரும்! இந்தக்கனவு எனக்கு நிறைய முறை வந்து உள்ளது!

           ஆனால் ஒருமுறை கூட நான் வலையை தாண்டி போனதேயில்லை! 

நிலவையும் தொட்டதில்லை!!!!

            அந்த வயதுக்குப்பிறகு அந்த்க்கனவு வரவில்லை.

            இன்னொரு கனவு -- நானும் ,என் தம்பி தங்கையும் வாசலில் 

விளையாடிக்கொண்டு இருக்கிறோம். திடீரென இருட்டி விடுகிறது! என் 

தம்பிகளையும், தன்கையயும் உள்ளே கொண்டு வந்து விட்டு கதவைச்சாத்தி

விடுகிறேன். திரும்பிப்பார்த்தால் பின் கதவு திறந்து கிடக்கிறது!

            மறுபடியும் பின் கதவைச் சாத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் பக்கக் கதவு

திறந்து கிடக்கிறது!

            பிள்ளைகள் மறுபடி அது வழியாக வெளியே செல்லுகிறார்கள்! மறுபடி 

அவர்களை உள்ளே இழுத்துப்போட்டு கதவைச் சாத்துகிறேன். மறுபடி பார்த்தால்

இரண்டு கதவுகள், மூன்று, நான்கு என்று வீடு முழுவதும் நிறைய கதவுகள் 

திறந்து கிடக்கின்றன!! 

         கனவு முடிந்து விழிப்பு வரும் வரை ஒரே பயம்தான் !!!!

கனவுகள் ஏன் வருகின்றன?

     கனவுகள் நமது வெளிமனதையும் ஆழ்மனதையும் இணைக்கும் பாலம் 

என்கிறார்கள்!!!!

   
உலகின் பாலூட்டிகள் அனைத்தும் கனவு காண்பதாக சொல்கிறார்கள்!!!

   நம் வீட்டு நாய் கூட கனவு காணுதாம்!!!

 எப்படியோ நம்ம கலாம் கூட கனவு காணுங்கள் என்கிறார்!!!!

    மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவுதான் அமெரிக்காவில் ஒபாமா வடிவில்

நிறைவேறியதே!!!

      சரி அதுக்கும்  நம்ம கனவுக்கும் என்ன சம்மந்தம்ங்கிறீங்களா?

எனக்குத்தெரியல!!! நீங்கதான் சொல்லுங்களேன்!!!!


No comments:

Post a Comment