Tuesday 23 December 2008

அமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்


                     ஒரு சாயங்காலம்!!!!!
நண்பருடைய அப்பா, மகனைப்பார்த்துவிட்டு வர வெளிநாடு சென்றிருந்தவர், இந்தியா திரும்பி விட்டார் என்று கேள்விப்பட்டு பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் உயர் படிப்பு படித்தவர். 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்!கடந்த முறை வந்திருந்தபோது குழந்தைகளை ஊட்டி பள்ளியில் சேர்க்க விரும்பினார். என்ன காரணமோ சேர்க்கவில்லை. இதுபோல் ஒவ்வொரு முறை வரும்போதும் ஊட்டி பள்ளியில் சேர்க்கப்பார்ப்பார். சேர்க்காமல் போய் விடுவார்.அவருடைய பையன்கள் இருவர். இருவரும் இந்த இழு பறியில்  உயர்நிலைப்ப்ள்ளி லெவலுக்குப்ப்போய் விட்டார்கள்! 

                     மேலும் அவரும் இந்தியா வந்து விடவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வேலை விசாரிப்பார். சம்பளம் குறைவு என்று போய் விடுவார்.

                     சரி அவர் அப்பாவைப்பார்த்துவிட்டு வருவோம் என்று போனேன்!.
வீடு நல்ல பெரிய வீடு!!
                      
                     என்ன அப்பச்சி! எப்படி இருக்கீங்க? வெளிநாடு போகும் போது பார்த்தது! கண்ணன்( கண்ணன் என் நண்பருடைய தம்பி!!!) எங்கே? என்றவாறு உள்ளே நுழைந்தேன்!!
                     வரவேற்று பேசிக்கொண்டு இருந்தார்!! வெளிநாட்டில் குளிர் அதிகம்,
கோட்டு இல்லாம இருக்க முடியல என்று அவர் அங்கு இருந்தபொது உபயோகித்த கோட்டையெல்லாம் கொண்டு வந்து காண்பித்தார்.
                      அப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது கேட்டேன். எப்ப அவர்கள் இந்தியா வருகிறார்கள்? என்று!!
                       அதுவரை நல்லா பேசிக்கிட்டு இருந்தவர் சட்டுன்னு டல் ஆயிட்டார். அதையேன் தம்பி கேக்கிறே, பேரன்க ரெண்டு பேரும் இதப்பத்தி பேச்ச எடுத்தாலே எந்திருச்சுப் போயிடுறானுங்க! முகம் குடுத்துப்பேச மாட்டேன்கிறானுங்க!!
                       அதவிடவும் ஒருநாள் மாடியில் ஒரே சத்தம்!! நான் மேல ஏறிப்போய்
பார்த்தால் அவன் கூடப்படிக்குற பையன்களும் பொண்ணுங்களும் பாட்டைப் போட்டுக்கொண்டு ஒரே ஆட்டம்!!!
                       ஆடிக்கிட்டு இருந்தவனுங்க என்னையப்பாத்ததும் ஆடிக்கிட்டு இருந்தத விட்டுட்டு என் கிட்ட வந்தானுங்க. வந்து பயங்கரமா திட்டிப்புட்டானுங்க. உன்னைய யாரு பெர்மிஷன் இல்லாம மேல வரச்சொன்னது? உனக்கு டீஸன்ஸியே இல்லயேன்னு சொல்லி” நீ இதையெல்லாம் கேக்கக்கூடாது, கீழே போ”ன்னு கீழே அனுப்பிட்டனுங்க!
                       அப்புறம் ஊர் போகும்போது கேட்டேன்” எப்பப்பா நீங்க ஊருக்கு வரப்போறீங்கன்னு? அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு? வீ டோண்ட் லைக் இண்டியா!! நீ அப்பா,அம்மாவைக்கம்பல் பண்ணாதே! வீ டோண்ட் லைக் கமிங் தேர்”ன்னுட்டானுங்க!
                       ஏப்பா ”நீங்க பொறந்த ஊரைப்பாக்க வருவது இல்லையா?ன்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லை! தாத்தா! வீ ஆர் அமெரிக்கன் !”னு ஒரே போடா போட்டுட்டானுங்க!!!!”
                      ” அப்புறம் நான் என்னத்தை சொல்லுறது! ஏதோ வந்தா வரட்டும்பா!
மகன் இருக்கிறவரை அப்பப்ப வருவாங்க,மகனுக்குப்பிறகு பேரன்கள்ளாம் வர மாட்டாங்கப்பா”என்று மிகுந்த வருத்தத்துடன் முடித்துக்கொண்டார்!!!
                       மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது!
                       நம்ம பதிவாளர்கள் நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்
அவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்!!! 
                        

 
                     

No comments:

Post a Comment