Monday 8 December 2008

ரத்தமும் நண்பனும்

மகப்பேறு பிரிவு!!ராஜா மிராசுதார் மருத்துவமனை!!
பொதுவா ஆண் பயிற்சி மருத்துவர்களுக்கு மகப்பேறு
பிரிவு என்றால் ஜாலியா இருக்கும். ஏன்னா நான் நீன்னு
சான்சுக்கு பெண் மருத்துவர்களிடையே போட்டியிருப்பதால்
நாங்க ஸ்கூட் அடிக்க தோதா இருக்கும்!!!!ஒரு நாள்
இரவு 10 மணி இருக்கும்...ஒரு இளம் பெண் வயது
20தான் இருக்கும்,மாட்டு வண்டில கூட்டிட்டு வந்தாங்க.
முதல் குழந்தை பிரசவத்துக்கு! பெண்மருத்துவர் பார்த்தார்.
வயிரு இரண்டாக இரண்டு பக்கமும் சரிந்தார்ப்போல்
இருந்தது.
    பிரசவத்துக்கு கிராமத்தில் அனுபவமில்லா நர்ஸிடம்
ரொம்ப நேரம் செலவாகியிருந்த்தது.குழந்தை பெரிதாக‌
இருந்ததால் கர்ப்பப்பை சற்றே பிள்விபட்டு குழந்தை
கர்ப்பப்பையை விட்டு வயிற்றுக்குள் வர ஆரம்பித்து
விட்டது.இதனால வயிற்றுக்குள்ளேயே ரத்தம் நிறய‌
வெளியாகி அந்தப்பெண் மயக்கம் ஆகியிருந்தாள்.
நாடி குறைந்து கொண்டே இருந்தது...அந்தப்பெண் 
ஆபத்தான கட்டத்தில் இருந்தாள்.
    உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்!
இல்லாவிட்டால் பெண் உயிரைக்காப்பதே சிரமம்.
கூட வந்தவர்கள் கிராமத்து ஆட்கள் ஒரே சத்தம்.
உடனே ஆபரேசன் பண்ணி உயிரைக்காப்பாத்துன்னு
ரகளை.ரத்த பிரிவை சோதனை செய்து பார்த்தால்
ஒரு அரிய வகை ரத்தம்.ரத்த வங்கியில் இரண்டு
பாட்டில் இருந்தது.அதையும் போட்டாச்சு.பற்றவில்லை.
ஆபரேசனுக்கு மேலும் ரத்தம் தேவை.
    கூட வந்த சொந்தக்காரங்களைக் கூப்பிட்டு
ரத்தம் வேணும். டெஸ்ட் பண்ணுவம் வாங்க. 
ரத்தம் சேந்திச்சின்னா எடுப்போம்ன்னேன். கூட்டம்
மெதுவா கலைஞ்சி ஒருதனக்கூட காணோம்.
    பொண்ணோட அப்பா அம்மா,தம்பி,தங்கைதான்
பாக்கி.ரத்தம்ன்னவுடனே எல்லோரும் ஒடிட்டானுங்க.
அந்தப்பொண்ணு அப்பாவைக்கூப்பிட்டு சோதனை
பண்ணோம்.அதே குரூப் ரத்தம்!! அதற்குள்
அம்மாகாரி வந்து "அய்யோ அவர் ரத்தத்தை
எடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு! காணி கரைய‌
வித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.
ரத்தம் எடுக்க விடவேயில்லை.
    சரி எப்படியோ போங்க நான் போய் சாப்பிட்டு
வந்திற்றேனுட்டு நானும் நண்பனும் ஓட்டலுக்குப்
போயிட்டொம்.
     சாப்பிட்டு கொஞ்சம் அசத்தவே அவனும்
நானும் ரிடைரிங் ரூம் போய் கொஞ்ச நேரம்
தூங்கிட்டோம்.
      திடீர்னு முழிப்பு வந்து எழுந்து வார்டை
நோக்கி போனோம்.நண்பனோ "கேஸ் கோல்தான்
மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்றான்.
வார்டுக்கு போனோம்! கேஸ் ஆபரேஷன் முடின்சிச்சு
பிழைத்துக்கொண்டு விட்டது என்றார்கள்.
      ரத்தம் எப்படி கிடைத்த்து என்றேன்!!
உங்க நண்பர் உங்களைப்பார்க்க வந்தார். நீங்க இல்ல‌
அவர் ரத்தம் இந்த பிரிவுதானாம்.சரின்னு அவர்
கொடுத்து விட்டு அவசர வேலை நான் போகிறேன்னு
ஒரு சீட்டெழுதி கொடுத்திட்டுப்போனார்னு துண்டு
காகிதம் ஒன்றைத்தந்தார்கள்!!!
    பிரித்துப்பார்த்தேன்! என் வகுப்பு தோழன் ,
அன்பு நண்பன் கையெழுத்து" தேவா ஊர்ல அம்மாவுக்கு
உடம்பு சரியில்லை. நான் விழுப்புரம் போகிறேன்! 
அன்பரசன்!" என்று இருந்தது.
    டாக்டர் வந்தாங்க! எங்கப்பா போனீங்க ரெண்டு
பேரும்? பரவாயில்லை அப்ஸ்கான்ட்(தலைமறைவு)
ஆனாலும் உங்க நண்பனை அனுப்பி ரத்தம் கொடுக்
க ஏற்பாடு பண்ணீட்டீங்களே, வெரி குட்!! போய்
தூங்குங்க ரெண்டு பேரும்".... 
    மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்" நன்றி
அன்பு

No comments:

Post a Comment