நீண்ட நாட்கள் கழித்து அந்தப்பெண் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருந்தபோது அதே நபரை தொலைக்காட்சியில் பார்த்துப்பரவசம் அடைந்தார். நாம் அவருக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆறிந்து தன் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் போன் செய்து இந்த நிகழ்ச்சியைக்க்கூறி அவரை ஆதரிக்க வேண்டினார்!!!
உங்கள் அனைவருக்கும் தெரியும் !!! அந்த இளைஞர் பாரக் ஒபாமா!!!!! என்று! இந்த நிகழ்சி மிகவும் மனதைத் தொட்டது!! அவர் இந்தியாவுக்கு உதவுவாரா போரை நிறுத்துவாரா என்பது எல்லாம் வேறு விஷயம்! ஆனால் அவருடைய மனிதத்தன்மை இந்த நிகழ்வில் போற்றத்தகுந்தது!!
நான்கு நாட்களுக்கு முன் ஒரு அரசியல் கோஷ்டி நிதி கேட்டு என்னிடம் வந்தனர்! அவர்கள் கட்சித்தலைவர் தலைநகர் வருவதாகவும் ,பெரிய அளவில் நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்!!
மாவட்டத்தலைவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டவரை இதுவரைய நான் பார்த்ததில்லை அவருடைய பெயரைச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார்!பெயரைக்கேட்டவுடன் எனக்கு அவரைப்பற்றி ஞாபகம் வந்து விட்டது! ( அவர் என் சக மருத்துவரைப்பற்றி அவதூறான போஸ்டர் போட்டவர்) .
ஓ!!! நீங்களா அது?.... போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டினீர்களே?..... என்று கேட்டேன்!! இப்படிக்கேட்டவுடன் அவர் முகம் சுருங்கி விட்டது!!
நீங்க வேற கட்சியில் இருந்தீர்களே?..... என்றேன்! ஆமாம் நாங்கள் எல்லாம் இந்தக்கட்சிக்கு வந்துவிட்டோம் என்றார்!!.....மிக நல்லது!! ஆனால்.. சாரி, தற்போது என்னால் பணம் தர முடியாது என்று கூறி ஒரு வழியாக அனுப்பி விட்டேன்!!!
வெளியே செல்லும் பொது பெரிய பெரிய விளம்பரங்கள் கண்ணில் பட்டன.
அதில் எனக்குத்தெரிந்த அரசியல் வாதிகள் கை கூப்பிக்கொண்டு இருந்தனர். ஆச்சரியம்! மிக குறுகிய காலத்தில் நிறைய பேர் கட்சி மாறி விட்டனர்!!
அதில் இருந்த இன்னொரு நபர் என்னிடம் அவர் கட்சி பேப்பருக்கு சந்தா வாங்கி விட்டு ஏமாற்றியவர்! அவருடன் சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தவர் என் இன்னொரு நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டி போலீசால் தேடி
மாவட்டம் மாவட்டமாக ஓடி ஒளிந்தவர்!!
இப்படி போஸ்டர்களைக்கண்டு மனம் வெறுத்துப்போனேன்!
புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்!!!
இது புதியவர்கள்மீது உள்ள நம்பிக்கையைத் தகர்க்கிறது!!! தமிழ்நாட்டு அரசியல் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது!!!!
தமிழகத்தின் எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்!
புதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா?
வலைஞர்கள் தங்கள் கருத்தை எழுதலாமே!!!
No comments:
Post a Comment