இந்தத் தேர்தலின் முன் நடந்த கூத்துகளை நேரடியாகப் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்தேன். ஆயினும் எனக்குத்தோன்றிய சில விசயங்களை எழுதினால் என்ன என்று தோன்றியதால் எழுதுகிறேன். யார் மனதாவது புண்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்!
1.மாயாவதி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அரசியல் வாழ்வில் தன்னிகரற்று விளங்கிய கன்ஷிராமின் வாரிசாக மாயாவதி அரசியலுக்கு வந்தார்.1995ம் ஆண்டு சாதீய பிடிப்புகள் அதிகம் உள்ள உ.பி.யின் முதல்வர் அரியணையில் மாயாவதி அமர்ந்தார்..இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரான முதல் தலித் இவர்தான். அதோடு மட்டுமில்லை... மிக இளம் வயதில் இந்தியாவில் முதல்வரானவரும் மாயாவதிதான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்கு வயது 39.
தற்போது?..... கட்சியில் அடிப்படை உறுப்பினர்களுக்கு எந்த பயனும் முன்னுரிமையும் இல்லை!! பிற கட்சிகளைப்போல் தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது!! தலீத்துகளுக்கு செய்யவேண்டியது நிறைய இருக்கும் போதே அதை விடுத்து பிரதமராகும் கனவில் தன் கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்த முயன்றார். தலீத்துகளுக்கு எதிரான அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாதி வெறியர்கள் கூட அவர் கட்சியில் பொறுப்புகளை ஏற்றதுதான் மிகக்கொடுமை.
மாயாவதியின் தமிழக வருகையும் தலித் ஓட்டுக்களைப் பிரிக்கவே உதவும்..
2.உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றி இந்தியஅரசியலில் ஆட்சியைக்கூட்டணியாக வெல்லலாம் என்று மனப்பால் குடித்தனர்.
காங்கிரசை கழற்றி விட்டு விட்டு லோக் ஜன சக்தி தலைவர் பஸ்வானை சேர்த்துக் கொண்டு 4-வது அணியை தொடங்கினார்கள்.
பீகாரில் லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 22 இடங்களில் 2004ல் வெற்றிபெற்றது.
இந்தத்தேர்தலில் கடைசி நேரத்தில் செய்த குழப்படியால் தோல்விமுகம் கண்டு நொந்து போயிருக்கிறார் லாலு.
அதைத் தற்போது தான் செய்த தவறு என்றும் ஒப்புக்கொள்கிறார்.
தேர்தலில் பிரதமராகலாம் என்று ஆசைப்பட்ட அனைவரும் மண்ணைக்கவ்வியுள்ளனர் இந்தத்தேர்தலில்!
அதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை!!! இந்திய மக்களும் அப்படித்தான்.
இதையே இந்ததேர்தல் தெளிவாக உணர்த்தியுள்ளது!
பதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக.
No comments:
Post a Comment