Saturday 16 May 2009

தேர்தல் முடிவுகள்!! சாட்டையடி!!

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன! நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது முடிவுகள்!!

1. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் வெளியேற்றப்பட்டு உள்ளது இந்தத்தேர்தலின் சிறப்பு. நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி!! இந்த முறை அவர் கணக்கு தப்பிவிட்டது..இந்த முடிவு சந்தர்ப்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஒரு பாடம்!!

2.ஆளும் பெரும்தலைகள் குறைந்த வித்தியாசத்தில் இழுபறி! பணம் இரண்டு பக்கமும் விளையாடியதில் மக்களுக்கு குழப்பம்.

ப.சிதம்பரம் தோற்பார் என்று எண்ணினர். ஆனாலும் எதிர் வேட்பாளரின் வேகம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் சிதம்பரத்துக்கு சரியான சவாலாக இருந்தன! கடைசிவரை தொடர்ந்த தோல்வி செய்திகள் கடைசியில் மாறிவிட்டன!! மறுவாக்கு எண்ணிக்கை கோரினார் கண்ணப்பன்!! கடைசியில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிப்பு!!

ப.சிதம்பரம் தொகுதியை மறு ஆய்வு செய்து செய்யவேண்டியவைகளை தொகுதிக்கு செய்யவேண்டும்.

3.வைகோ எதிர்பார்த்தது போல் தோல்வி!! அவரே இதைத்தான் எதிர்பார்த்து இருப்பார். கூண்டுச் சிங்கம் கர்சித்ததை யாரும் ரசிக்கவில்லை!!  

4.சிதம்பரத்தில் திருமா வெற்றி! சிறு வித்தியாசத்தில் தோற்பார் என்று எதிர்பார்த்தேன். கடைசிவரை கூட்டணி மாறாமல் இருந்ததற்கு கிடைத்த பரிசு!!திருமாவுக்கு என்ன அமைச்சர் பதவி!! அன்புமணி இடம் கிட்டுமா?

5.மணிசங்கர்- புத்திசாலி வேட்பாளர். ஒருமுறை பெட்ரோலியம் சம்பந்தமாக வெளிநாடுகளில் அவர் பேசிய பேச்சு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எங்கே போனாலும் தொகுதியை சரியாக கவனிக்கவில்லை என்று பேசப்படுகிறது!! அதுதான் தோல்வியின் காரணமா?

6.ஈழத்தமிழர் பிரச்சினையில் நம் அரசியல்வாதிகளின் கூத்துக்கள் தேர்தலில் பிரதிபலித்தாற்போல் தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் இருந்ததுபோல் தீவிரமான தாக்கம் அவர்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். இதனாலேயே அறிவுசார் வாக்காளர்களின் எதிபர்ப்புகளுக்கு ஏற்ற முடிவுகள் பலசமயங்களில் வெகுஜன அரசியலில் கிடைப்பதில்லை.

மேலும் தீவிரமான அலைகள் எதுவும் வீசவில்லை இந்தத்தேர்தலில்... திடீர் தேர்தல் அறிக்கைகளும் ஸ்டண்டுகளும் பொய்த்துப்போனது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது!!

No comments:

Post a Comment