அன்பு நண்பர்களே!
மேலேயுள்ள அமெரிக்கக் கொடி எதனால் செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? தோலால்! அதுவும் மனிதத்தோலால்! கேட்கவே அதிர்ச்சியாக உள்ளதுதானே!!
Andrew Krasnow ஆன்ட்ரூ க்ராஸ்னோ என்ற அமெரிக்கக் கலைஞர்தான் இதைச் செய்தவர்.கடந்த 20 வருடங்களாக அவர் இறந்த தானம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட தோல்களினால் அமெரிக்கக்கொடி,அமெரிக்க வரைபடம்,காலணி போன்ற தோல் வடிவங்களைச் செய்துவருகிறார்.
மனிதத்தோலினால் லாம்ப் ஷேட் வரிசை படைப்புகள் நாசிக்களின் கொடுமையில் முகாம்களில் கொலைசெய்யப்படவர்களை பிரதிபலிப்பதாக செய்துள்ளார்.
இதனை அமெரிக்காவின் உலகளாவிய போர் அடக்குமுறையை எதிர்த்து அவருடைய பதிவாக அவர் கருதுவதாகக் கூறுகிறார்!
இவருடைய படைப்புகளை பார்வைக்கு வைக்க இங்கிலாந்து அரசின் மனித திசுப் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது!
உலக அளவில் கலை ஆர்வலர்கள் மனிதத்தோலை உபயோகிப்பதைக் கண்டனம் செய்துள்ளனர்.
மனிததோலால் கலைப்பொருள் செய்வது தவறு என்பது என் கருத்து, அது எத்தகைய காரணத்துக்காக இருந்தாலும்! ஏன் என்று கேட்கிறீர்களா?சற்று தீவிரமாக சிந்திப்போமானால் இதன் பின் விளைவுகள் கொடூரமாக இருப்பது தெரிய வரும்.
இன்று மனிதத்தோலால் செய்யும் இவர்கள் நாளை மனிதனின் வேறு உறுப்புகளையும் உபயோகிப்பார்கள்! தோலை அனுமதிக்கும் அரசு ஏன் உறுப்புக்களை அனுமதிக்கக்கூடாது என்று கேட்பர். இறந்த மனிதனின் தோல் கிடைக்காத பட்சத்தில் வேறு ஆபத்தான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்,இதற்கென ஏஜெண்டுகள் என்று ஒரு பெரிய சந்தையே உருவாகும். நிழல் உலகில் இந்தப் பொருட்கள் விற்பனையும் செய்ய ஆரம்பித்தால் அவ்வளவுதான்!!
விலங்குகள் போல எளிய மனிதர்களும் வெளியே தெரியாமல் வேட்டையாடப்படுவார்கள்!! இந்த விசயங்களை நீதித்துறை நீதிபதிகளும்,அரசு சட்ட வல்லுனர்களும் கவனத்தில் கொண்டு இதனை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்பதே என் கருத்து!
இதையும் இங்கிலாந்து அரசு எப்படி அனுமதித்தது என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது!
உங்களின் கருத்துக்களையும் பதியுங்கள் நண்பர்களே!!
பதிவு பிடித்திருந்தால் தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் போடுங்க ஓட்டு!!
No comments:
Post a Comment