Tuesday 19 May 2009

எழுந்து வா பிரபாகரா!! நீ இறக்கவில்லை!!

 

பிரபாகரா!!

திறமயுள்ளோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர்.

அது போல் சென்ற நாட்டிலெல்லாம் தான் சிறந்ததோடு அல்லாமல் அந்நாட்டில் உள்ளோர் அனைவரையும் வாழ வைக்கும் உலகின் மிகச்சிறந்த தமிழ்க்குடியின் தன்னிகரற்ற தலைமகனே!!

புத்தியிலும் சக்தியிலும் யுக்தியிலும் யாருண்டு உனக்கு நிகர் இங்கே!! பஞ்சணையிலும்,பட்டாடைகளிலும் புரளும் வாய்ப்புகள் கோடி இருந்தும் காடுகளிலும் மலைகளிலும் கண்ணுறங்காமல் அலைந்த மாவீரனே!!

முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழ் இனத்துக்காக நீ அடைந்த இன்னலை எந்தத் தமிழ் நெஞ்சமும் மறக்காது!

இருக்கிறாரா? எம் தலைவர் உயிருடன் என்று கதறும் எங்கள் குரல் உன்னை அடைகிறதா!!

நீ இறந்திருக்க முடியாது!! எத்தனை துரோகிகள் காட்டிக்கொடுத்தாலும் விண்ணை யாரும் தொட்டுவிட முடியாது!!

எத்தனை புல்லுருவிகள் உன்தடம் சொன்னாலும் சூரியனே!! உன்னை யாரும் சுட்டுவிட முடியாது!!

உன் புகழ் எழுத எவரிடமும் சொற்கள் இல்லை!! உலக மொழிகளெல்லாம் போதாது உன் சரித்திரம் எழுத!!

நீ சுவாசித்த காற்றை சுவாசிக்கக்கூட இங்கு யாருக்கும் அருகதை இல்லை!!

பொய்யான உடல் சுமந்து, சிறுநெஞ்சில் வஞ்சம் சுமந்து வாழும் கயவர்கள் உனக்கு ஈடா?

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய் !! நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! வீடிழந்து, உறவிழந்து ஈழத்தில் துயரப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! தாயிழந்து, தந்தையற்று பயத்தாலும் பசியாலும் துடிக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பிஞ்சுகளுக்காகவும் நீ உயிருடன் இருப்பாய்!!

எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!

No comments:

Post a Comment