எவ்வளவுதான் நாம் புத்திசாலியாக இருந்தாலும் நமக்குத்தெரியாத நிறைய விசயங்கள் இருக்குங்க. நாம் நிறைய எழுதுகிறோம். அதில் பாதி குப்பைதான்!! அப்படியெல்லாம் இல்லை என்கிறீரா? என்னைப்பொறுத்தவரை நான் எழுதுவதில் பாதி குப்பைதான்!!
சரி!! எழுதவந்த மேட்டரைப்பார்ப்போம்!!
உலகின் முக்கிய பிரச்சினைகளில் குப்பையினால் ஏற்படும் தீமைகளை எப்படி தடுப்பது என்பதும் ஒன்று... குப்பையால் நிறைய பிரச்சினைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். குப்பையில் பொதுவாக மக்கும் குப்பை,மட்காத குப்பைன்னு இரண்டுவிதமா பிரிக்கிறாங்க. இரண்டையும் வேறுவேறு விதமாக நாம் சேகரித்து சுத்திகரிப்பு செய்கிறோம்.
குப்பையைப்பத்தி தெரியாத சில கருத்துக்களைப் பார்ப்போம்
1 கடலில் சேர்ந்துள்ள குப்பையின் அளவைக்கேட்டால் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்! ஆம். 100 மில்லியன் டன் அளவு பிளாஸ்டிக் குப்பைகள் உலகின் கடல்பரப்பில் தேங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்!!
2. இமயமலையைப் பார்ப்போம்! பனிபடர்ந்து அழகாகக் காட்சியளிக்கும் இமயமலை குப்பைகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமய மலை ஏறும் மிகக்கடினமான பாதையெல்லாம் மலையேறுபவர்கள் சாப்பிட்டுப்போட்ட குப்பைகள்,கழிவுகள், தீர்ந்துபோன ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றால் மாசுபட்டு உள்ளது. 29000 அடிக்குமேல் போனால் அங்கும் இங்கும் இறந்த மனித உடல்கள் காணப்படுமாம்!! இறந்த உடல்களை பனிப்பாறைகளிலிருந்து மீட்பது மிகக்கடினம் என்பதால் நிறைய உடல்கள் அங்கேயே விட்டு விடுவது வழக்கமாம்!
3.குப்பைகள் சாதாரணமாக எவ்வளவு நாட்களில் மண்ணோடு சேர்ந்து விசத்தன்மை இழக்கும்? கண்ணாடி பாட்டில்கள் --- 1 மில்லியன் வருடங்கள்.
ப்ளாஸ்டிக் கப்---500 வருடங்கள்
அலுமினிய டப்பா----200-500 வருடங்கள்
ப்ளாஸ்டிக் பைகள்---20 வருடங்கள்
சிகரெட் மிச்சம்--5 வருடங்கள்!!
4.குப்பைகளை நம் துப்புறவுப்பணியாளர்கள் ஊருக்கு வெளியில் சேமிப்பார்கள்!! அல்லது பெரிய அகலமான குழிகளைத்தோண்டி சேமிப்பார்கள். இதன் பக்கத்தில் வசிப்பது ஆபத்து! ஏனெனில் இதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியாகுதாம். இவை பக்கத்தில் உள்ள நீர்நிலை, மண் ஆகியவற்றையும் மாசுபடுத்தும். இவற்றில் பல வாயுக்கள் புற்றுநோய் உருவாக்கும் என்று சொல்கிறார்கள்!!!
மக்களே வீடு, இடம் வாங்கும் போது கவனித்து வாங்கவும்!!
5.மேலே சொன்ன பிரச்சினைகளுக்கு விடிவு இல்லையா என்று கேட்கிறீர்களா? இருக்கு!!
டாக்டர்.லூயிஸ் என்பவர் ஒரு வழி கண்டு பிடித்துள்ளார். மின்னூட்டப்பட்ட ப்ளாஸ்மா காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது( பள்ளியில் படித்தமாதிரி இருக்கா?) சூரியனின் வெளிப்பகுதியை விட அதிகமான சூட்டை உருவாக்குமாம்?? இந்த வகை ப்ளாஸ்மா உலையில் குப்பைகளை எரித்தால் உருவாகும் வாயு பிற வாயுக்களைப்போல அதிகம் கேடு விளைவிக்காது. எரிக்கப்பட்ட கழிவுகள் கட்டிடம் கட்ட பயன்படுமாம்!
என்ன நண்பர்களே!! நாமும் அதிகம் குப்பை சேர்க்காமல் சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்!!
தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டுப்போடுங்கள்!!
No comments:
Post a Comment