சிங்கப்பூர் இளையர்கள் இடையே கோபமும்
வன்செயலும் அதிகரித்து வருகிறதாம்!!
சிறுவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்வது இங்கு
அதிகரித்து உள்ளது என்கின்றனர்!
இதனால் நீதிமன்றத்தில்
இத்தகைய வழக்குகள் குவிந்த வண்ணம்
உள்ளனவாம்!!.
நீதிபதிகளின் கடுமையான கேள்விகளுக்கு
சிறுவர்களுடைய பெற்றோர்களும் உள்ளாகின்றனர்.
தங்கள் பிள்ளைகள் செய்த தவறுக்காக சிறார்
நீதிமன்ற வாசலில் ஒவ்வொரு நாளும் பல
பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.
நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கைப் பாருங்கள்!!
இந்த வழக்கைப்பார்த்தாலே சிங்கை இளைஞர் பற்றி
புரியும்!
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு!
என்னதான் 13 - 16 வயது வரையுள்ள வயதினர்,
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டாலும்
அடிப்பார்கள்,திட்டுவார்கள், நாம் கேள்விப்பட்டவரை!
இந்த சம்பவம் ரொம்ப ஓவர்!
மேட்டர் என்னன்னா பதினாறு வயதுப்பெண்
ஒருத்தியை பதிமூன்று வயதுப்பெண்
தரக்குறைவாகவும்,அசிங்கமாகவும் பேசித்திட்டி
விட்டாளாம்.
தன்னைப் பற்றித் தரக் குறைவாகப் பேசி அவமானப்
படுத்தியதற்காக அந்தப்பெண் பதிமூன்று
வயதுப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டாள்!!
அதற்காக ஆள் வைத்து அந்த பதிமூன்று வயது
சிறுமியைக் கற்பழிக்குமாறு கூறியிருக்கிறாள்!
(அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?)
அந்த ஆடவரால் எவ்வளவோ முயன்றும் சிறுமியைக்
கற்பழிக்க முடியவில்லை.
ஆத்திரமடைந்த 16 வயது பெண், 13-15 வயது நிரம்பிய
சக நண்பர்களுடன் சேர்ந்து, 13 வயதுச் சிறுமியைக்
கடுமையாக அடித்துத் துன்புறுத்தியிருக்கிறாள்!
அந்த ஆணுடன் பிற பாலியல் செய்கைகளில்
ஈடுபடுத்தியிருக்கிறாள்!
நினைக்கவே கொடுமையாகவுள்ளது! இதுபோன்ற
நிகழ்வுகள் பல நாடுகளில் நடக்கின்றன. சிங்கப்பூரில்
நடந்தது வெளியில் தெரிகிறது..
அந்த 16 வயதுக் குற்றவாளியைச் சிறார் நீதிமன்றம்
மறுவாழ்வு பயிற்சிக்கு அனுப்பிவைத்து உள்ளது!!!
கொடுமைடா சாமி!!!
இளம் வயதினரிடையே நிலவும் வன்முறை பற்றிய
விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது
சிங்கப்பூர் நற்பணிப் பேரவை.
ஏதாவது செய்யுங்க! குழ்ந்தைகளின் மேல் கவனம்
செலுத்துங்கள்!!
.
.
.
.
.
No comments:
Post a Comment