Saturday, 28 February 2009

மரணம் நேரடி ஒளிபரப்பு!

 

 

 

சில்பா செட்டியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

கலந்து கொண்டு நிகழ்ச்சியின்போது இனவெறியுடன்

நடந்து கொண்ட நடிகை ஜேட் கூடி நேற்று ஜேக்

ட்வீட் என்ற வாலிபரைத் திருமணம் செய்து

கொண்டார்!

 

அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற ஜேக்

முன் வந்தார். அதன்படி, எஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில்

உள்ள டவுன் ஹால் என்ற ஓட்டலில் வைத்து

இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

 

ஏன் கடைசி ஆசை என்கிறீர்களா? சில்பாவுடன்

சர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜேட் கூடிக்கு   கர்ப்பப்பை

வாய் புற்றுநோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று

வருகிறார்.

 

கர்ப்பப்பை புற்றுநோய்க்காக   லண்டன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு

கீமோ தெரபி' சிகிச்சை அளித்ததால் தலையில்

மொட்டை அடிக்கப்பட்டது

 

அவருக்கு புற்று நோயானது தற்போது

குடல்,கல்லீரல்,மற்றும் அதைச் சுற்றியுள்ள வயிற்றின்

சுவர்களிலும் பரவியுள்ளது!!

 

ஜேட் கூடியின் உயிருக்கு டாக்டர்கள் இன்னும் சில

வாரங்களே கெடு விதித்துள்ளனர்! 

 

திருமணத்தை முன்னிட்டு தனி ஹெலிகாப்டர்

மூலமாக நேற்று முன்தினமே ஜேட் கூடி ஓட்டலுக்கு

வந்து சேர்ந்தார். மணமகன் ஜேக், தனது இல்லத்தில்

இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டு நேற்று

காலை 10 மணிக்கு ஓட்டலுக்கு வந்தார். அதன் பிறகு,

45 நிமிட நேரம் திருமண சடங்குகள் நடைபெற்றன

 

இன்னும் சில வாரங்களில் இறக்கப்போகும் ஜேட்

கூடியின் திருமணம் மகிழ்ச்சியும் சோகமும்

இழையோட நடந்து முடிந்தது. மணமகன் ஜேக், ஒரு

அடிதடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது

குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் தான்

அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது

 

எனினும், 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே

செல்ல கூடாது, எஸ்ஸெக்சில் உள்ள ஒரே

முகவரியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது

உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சில வாரங்களுக்கு முன்

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது புது மனைவியுடன் முதலிரவு

நடத்துவதற்காக 7 மணிக்கு மேல் வீட்டில் இருக்க

வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் ஒரு நாளுக்கு

தளர்த்தப்பட்டு உள்ளது.

 

என் வாழ்நாளில் அதிகநேரம் நான் டி.வி. சினிமாவில்

கழித்துள்ளேன்  என் இறப்பையும் நேரடி ஒளிபரப்பு

செய்யவேண்டும்என்று விரும்புகிறேன் என்று

கூறுகிறார்.இதன் மூலம் இளம் வயதினருக்கு இந்த

வியாதியுடன் மன உறுதியுடன் வாழ்வதைப் பற்றி

நேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்கிறார்..

 

27 வயதே ஆன அவருக்கு பாபி(5

வயது),ஃப்ரெடி(4 வயது) என்ற இரு குழந்தைகள்

உள்ளனர்.

என்ன மரணத்தை நேரடியாகப் பார்ப்பது சரியா? தப்பா? 

 

 

 

 

No comments:

Post a Comment