Friday, 20 February 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!

        

 நிலாவும் அம்மாவும் காலையிலேயே நம்ம செய்திப்பதிவுக்கு 3 கமெண்ட் அடிச்சாங்க.சரி அவர்கள் பதிவைப்பார்ப்போம்னு போய்ப் பார்த்தேன்.அகராதி புடிச்சவ!

         பாப்பா நிலாவுடைய அருஞ்சொல் அகராதியை வெளியிட்டு இருந்தார்கள்!!(நிலா போல கூலா இருப்பாங்க!!!!!!!)

         அதுகுழந்தைகளில்மழலைத்தொகுப்பு!!.அருமையா இருந்த்து!  ரெண்டு கமண்ட் போட்டுட்டு வந்தா மருக்கா வரச்சொல்லி உத்தரவு மெயிலில் வருது!!!

          சரின்னு அங்கே போனா நிலா அம்மாவுடைய ரெண்டாவது முகம்? ”பொன்னாத்தா என்ற சண்டைக்கோழி”!!!எனக்குப்பிடித்தவர்கள்!

          தலைப்பைப்பார்த்தவுடன்   ஆஹா! ஏதோ வெவகாரம், எஸ்கேப் என்று மண்டை ஓரத்தில் மணி அடிச்சது.

           சரி நம்ம இதுக்கெல்லாம் பயந்த ஆளான்னு உள்ளே போனா நல்லா மாட்டிக்கிட்டேன்.!  அவுங்க ஆபீசில் வேலையில்லாத நேரத்தில் (அதாவது காலை 10.00-மாலை 6.00 வரை!  சும்மா! ஜோக்கு! கோவிக்கவேண்டாம் நிலா அம்மா!)   உங்களைக்கவர்ந்த மனிதர் யார்? என்று எல்லோரும் சொல்லனும்னு ஒரு  முடிவு பண்ணி அதைத் தொடர் விளையாட்டா ஆரம்பித்து விட்டாங்க. அதோட விட்டா பரவாயில்லை.

அவங்க ஆபீஸில் ஆரம்பித்த தொடர் விளையாட்டு கணினிக்குள் வைரஸ் மாதிரி பரவி பலரைத் தாக்கி விட்டது! அதுல என்னையும் கலந்துக்கச்சொல்லி அழைப்பு!! 

வேறு வழி!

எனக்குப்பிடித்தவர்-- புராணகாலத்தில்

1.கர்ணன்! கர்ணனைப் பிடிக்காதவர் உண்டோ? போர் என்றாலே சாவுதான்! எவனோ 2 பேர் பிரச்சினையில் ஆயிரம் பேர் சாகும் இடம் போர்க்களம்! அதிலேயே நேர்மையை நிலைநாட்டினான் கர்ணன்!!  இறைவனை(கண்ணனை) மனிதன் விஞ்சியது இங்குதான் !  

2.அம்பேத்கார்! காந்தி போன்ற மாஸ் லீடர் இருந்த காலத்தில் எல்லோரும் கதருக்கு மாறிய காலத்தில் தனித்து சிந்தித்த ஜீவ நதி! பணம், பதவிக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளில் இந்தியாவில் வந்தவாய்ப்புகள் துறந்து  போராடிய பொருளாதார மேதை!       

இந்த இருவர் போதுமே இப்போது!

                                                                                                   ”விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும்” .

கூப்பிட்டுவிடுவோம்!

காசா ! பணமா ?

நான் கூப்பிடுவது

1.ஜமால்!     கற்போம் வாருங்கள்!   

2.ஆதவாகுழந்தை ஓவியம்!

3.செய்யது மழைக்கு ஒதுங்கியவை!

4.அபு அஃப்ஸர்என் உயிரே!

5.வேத்தியன் வேத்தியனின் பக்கம்

6.இராகவன் நைஜீரியா..

தேவா..

39 comments:

கவின் said...

அரம்பிச்சுட்டிங்களா... நடக்கட்டும்

மிஸஸ்.டவுட் said...

அகராதிக்கு ஆங்கிலத்துல டிக்சனரினு அர்த்தமாம்,அப்போ அகராதி பிடிச்சவனா "டிக்சனரி பிடிச்சவளா தேவன்மயம்? இதுவும் ஒரு டவுட் தான் வேற என்ன???

புதியவன் said...

//கர்ணன்! கர்ணனைப் பிடிக்காதவர் உண்டோ?//

பாரதத்தில் கர்ணனை எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நட்பு என்றால் கர்ணன் என்றே பொருள் கொள்ளலாம்...

நிலாவும் அம்மாவும் said...

\\\\சரின்னு அங்கே போனா நிலா அம்மாவுடைய ரெண்டாவது முகம்? ”பொன்னாத்தா என்ற சண்டைக்கோழி”!!!/////

எனக்கு ஒரே ஒரு முகம் தானுங்கோ....அது தன் நிலாவோட அம்மா முகம்....

கர்ணன் எனக்கும் ரொம்ப பிடிக்கும்...இப்போ குட கர்ணன் படம் பார்த்த உடம்பெல்லாம் புல்லரிக்கும்..

அம்பேத்கார்னு அருமையா சொன்னேங்க....அவரை பார்த்தும் வியந்தது உண்டு...

நிறைய பேரை வம்புல இழுத்து விட்டேங்க போல இருக்கே.... ஹி ஹி

நிலாவும் அம்மாவும் said...

***\மிஸஸ்.டவுட் கூறியது...
அகராதிக்கு ஆங்கிலத்துல டிக்சனரினு அர்த்தமாம்,அப்போ அகராதி பிடிச்சவனா "டிக்சனரி பிடிச்சவளா தேவன்மயம்? இதுவும் ஒரு டவுட் தான் வேற என்ன??? /****

அகராதி அப்டின்னா தனக்குன்னு ஒரு வழி முறை வச்சுகிட்டு திமிர்தனம் பன்றவங்கன்னு அர்த்தம்

ஆதவா said...

வந்தோம்ம்... வந்தோம்......

இன்னும் பல்லு கூட விளக்கலல.

அப்பாலிக்கா வாரேன்!!!!

(என்னையும் கோர்த்துவிட்டுட்டீங்களா??? அவ்வ்வ்வ்)

வேத்தியன் said...

ஆஹா என்னா சாரே...
இப்ப தான் பல்லு விளக்கிட்டு சும்மா ஒரு லுக்கை விட்டுட்டு போகலாம்ன்னு வந்தா...
சரி சரி..
சார் நான் புதுசு..
என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க.. நான் செய்யுறேன்...
இதே தலைப்புல நான் ரெண்டு பேரப்பத்தி எழுதனுமா ???

SASee said...

இறைவனை மனிதன் விஞ்சியது இங்குதான் !

வேத்தியன் said...

எழுதி முடிச்சாச்சு தேவா சார்....
வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போறது...

அ.மு.செய்யது said...

:-)))

அ.மு.செய்யது said...

அம்பேத்கர் சட்ட மேதை தானே..???

அ.மு.செய்யது said...

//விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும்” .//

அப்ப முதல் ரெண்டு பேர் தான கணக்காகும்.??

அ.மு.செய்யது said...

//கூப்பிட்டுவிடுவோம்!

காசா ! பணமா ?
//

கொஞ்சம் செலவு ஆகுமே..

அ.மு.செய்யது said...

//1.ஜமால்! கற்போம் வாருங்கள்!

2.ஆதவாகுழந்தை ஓவியம்!

3.செய்யது மழைக்கு ஒதுங்கியவை!

4.அபு அஃப்ஸர்என் உயிரே!

5.வேத்தியன் வேத்தியனின் பக்கம்

6.இராகவன் நைஜீரியா..
//

இவங்கள்லாம் யாருங்க..புது பதிவர்களா ???

அ.மு.செய்யது said...

நல்லா போட்றீங்க கொக்கி...

காலங்காத்தாலயே உக்காந்து யோசிப்பீங்களோ !!!!!!

அ.மு.செய்யது said...

அரசியல் இதெல்லாம் சகசம்..

ரெகுலரா போயிட்டே இருப்போம்ல..

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

மீண்டும் ஒரு தொடரா!

நான் ரொம்ப சோம்பேறி ஆயிற்றே!

நட்புடன் ஜமால் said...

\\ மிஸஸ்.டவுட் கூறியது...

அகராதிக்கு ஆங்கிலத்துல டிக்சனரினு அர்த்தமாம்,அப்போ அகராதி பிடிச்சவனா "டிக்சனரி பிடிச்சவளா தேவன்மயம்? இதுவும் ஒரு டவுட் தான் வேற என்ன???\\

டவுட் கேட்கிறது மட்டுமே வேலையா

அட டவுட்டுங்க ...

அன்புமணி said...

புது புதுசா கிளப்பிறாங்களே... எப்பா.... எப்படியோ ஒரு பதிவு பதிவாகுது... ம். ம்! தூள் கிளப்புங்கோ!

இராகவன் நைஜிரியா said...

ஆட்ட விதிமுறைப் படி இரண்டு பேரத்தான் கூப்பிடணும்..

6 பேர கூப்பிட்டு இருக்கிங்கீங்க...

இப்படி நீங்க 6 பேர கூப்பிட்டா மத்தவங்களுக்கு ஆள் கிடைக்க வேண்டாமா?

அவ்....அவ்....அவ்....

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

ஆஹா!

மீண்டும் ஒரு தொடரா!

நான் ரொம்ப சோம்பேறி ஆயிற்றே! //

ஆமாம் நானும் பெரிய சோம்பேறி...

அபுஅஃப்ஸர் said...

விடிய விடிய தூங்காம உக்காந்து யோசிச்சீங்களோ, இப்படி மாட்டிவிடுறீங்களே

ஹி ஹி இப்போ சந்தோஷமா

அபுஅஃப்ஸர் said...

//”விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும்” . //

முதல் ரெண்டுபேருதானே, என்னாதான் நடக்குது பார்ப்போம்

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் கூறியது...
ஆஹா!

மீண்டும் ஒரு தொடரா!

நான் ரொம்ப சோம்பேறி ஆயிற்றே!
/

நா டபுல் டிரிப்ல் சோம்பேறிங்கோ...

நட்புடன் ஜமால் said...

என்ன தேவா!

உங்களை கவர்ந்தவர்கள்ல என் பெயர் தான் முதலில் வரும்ன்னு நினைச்சேன்

நிலாவும் அம்மாவும் said...

அம்மாடியோவ் தன்னை சோம்பேறின்னு சொல்லிக்குரதுல எம்புட்டு பெருமை...அப்டியே மூஞ்சில சோம்பேறித்தனம் பிரகாசிக்குதே....

தண்ணிய ஊத்தி எழுப்பி விடுங்க டாக்டர்..இல்லன்னா ஒற்று ஊசிய போடுங்க ..ஹி ஹி

thevanmayam said...

அகராதிக்கு ஆங்கிலத்துல டிக்சனரினு அர்த்தமாம்,அப்போ அகராதி பிடிச்சவனா "டிக்சனரி பிடிச்சவளா தேவன்மயம்? இதுவும் ஒரு டவுட் தான் வேற என்ன???//
நல்ல டவுட்தான்!
நம்ம அம்மாட்டே கேட்டு விடுவோம்!!
தேவா..

thevanmayam said...

//கர்ணன்! கர்ணனைப் பிடிக்காதவர் உண்டோ?//

பாரதத்தில் கர்ணனை எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நட்பு என்றால் கர்ணன் என்றே பொருள் கொள்ளலாம்//

ஆமாம் ! கர்ணனுக்கு இணை பாரத்தில் இல்லை!

thevanmayam said...

அம்பேத்கர் சட்ட மேதை தானே..???//

காமர்ஸ் பேராசிரியர்!
அவர் உரை கேட்க அனைத்துக்கல்லூரி மாணவர்களும் கூடிவிடுவர்!
தேவா..

thevanmayam said...

நல்லா போட்றீங்க கொக்கி...

காலங்காத்தாலயே உக்காந்து யோசிப்பீங்களோ !!!!!!//

என்மேலே பாய்ந்த கொக்கியை மாத்தி விட்டேன்.

thevanmayam said...

ஆஹா!

மீண்டும் ஒரு தொடரா!

நான் ரொம்ப சோம்பேறி ஆயிற்றே!//

பதிவைப்போடுங்கப்பு!

thevanmayam said...

புது புதுசா கிளப்பிறாங்களே... எப்பா.... எப்படியோ ஒரு பதிவு பதிவாகுது... ம். ம்! தூள் கிளப்புங்கோ!//

உங்களைக் கோர்த்தாதான் சரிவரும்!!

thevanmayam said...

ஆட்ட விதிமுறைப் படி இரண்டு பேரத்தான் கூப்பிடணும்..

6 பேர கூப்பிட்டு இருக்கிங்கீங்க...

இப்படி நீங்க 6 பேர கூப்பிட்டா மத்தவங்களுக்கு ஆள் கிடைக்க வேண்டாமா?

அவ்....அவ்....அவ்.//

ஆறுல 2 தேறிவிட்டது!

thevanmayam said...

என்ன தேவா!

உங்களை கவர்ந்தவர்கள்ல என் பெயர் தான் முதலில் வரும்ன்னு நினைச்சேன்///

அது வேற லிஸ்ட்!!

நட்புடன் ஜமால் said...

\\ஆதவா கூறியது...

வந்தோம்ம்... வந்தோம்......

இன்னும் பல்லு கூட விளக்கலல.

அப்பாலிக்கா வாரேன்!!!!

(என்னையும் கோர்த்துவிட்டுட்டீங்களா??? அவ்வ்வ்வ்)\\

ச்சீ ச்சீ என்ன இது

பல்லு விளக்காம

அவ்வ்வ்வ்ன்னு சொல்லிக்கிட்டு ...

நட்புடன் ஜமால் said...

\\ thevanmayam கூறியது...

என்ன தேவா!

உங்களை கவர்ந்தவர்கள்ல என் பெயர் தான் முதலில் வரும்ன்னு நினைச்சேன்///

அது வேற லிஸ்ட்!!\\

அது வேற இருக்கா!

அது எப்போ ரிலீஸ் ...

அதுலையும் மாட்டி உட்டுடாதீங்க

Iyarkai said...

நடக்கட்டும் நடக்கட்டும்:-)

அன்புடன் அருணா said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா.....ஆரம்பிச்சுட்டாங்கய்யா....
ஆமா...ரெண்டே ரெண்டு பேர்தான் உங்களைக் கவர்ந்தவர்களா???
அன்புடன் அருணா

நிலாவும் அம்மாவும் said...

ஆஸ்கர் பற்றி பதிவு போட்ருக்கேன்.....வந்து சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க

Post a Comment