Friday 27 February 2009

இறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்!!!

 

ரஹ்மானுக்குக் கோபமா?

         இந்தியாவுக்குப்பெருமை சேர்த்த ஆஸ்கார்

நாயகன் இந்தியா வந்து சேர்ந்தார்.சென்னையில்பிரஸ்

மீட் ஹாலுக்கு வந்த அவரைச் சுமார் 50 போட்டோ

கிராபர்களுக்கு மேல் சூழ்ந்துகொண்டார்கள்.

கிட்டத்தட்ட 20 நிமிடம் அவரை மாற்றி மாற்றிப் படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். 

"நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் ஓடிட மாட்டேன். மும்பை போட்டோ கிராபர்கள் மாதிரி செட் செட்டா எடுத்துக்கொள்ளுங்களேன்" என்று ரஹ்மான் கேட்டுக்கொண்டும் ஒருவரும் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், "அப்படின்னா நான் கிளம்புறேன்" என்று மூன்று முறை செல்லக் கோபம் காட்டினார். ம்ஹும், அதற்கும் சளைத்தால்தானே? வேறு வழியில்லாமல் அவர்களின் போக்குக்கே விட்டுவிட்டார்.

ஒரு வழியாக அவர்கள் அவரை விட்டு விலகியதும்தான் பிரஸ் மீட் துவங்கியது. கேள்வி கேட்கவும் நிருபர்கள் ஒருவரை ஒருவர் முண்டிக்கொண்டார்கள். 

இரண்டு பகுதிகளாக நடைபெற்ற பிரஸ் மீட்டில், முதலில் நடந்த பிரிண்ட் மீடியா பிரஸ் மீட்டில்தான் இந்தக் களேபரம். இரண்டாவதாக நடந்த எலக்ட்ரானிக் மீடியா பிரஸ் மீட்டில் ஒரு களேபரமும் இல்லை.

"இங்கே ரொம்ப டீசன்ட்டா இருக்கே?" என்று கமெண்ட் அடித்துக்கொண்டே சீட்டில் அமர்ந்தார் ரஹ்மான். எல்லாக் கேள்விகளுக்கும் சரமாரியான ஜாலி மூடில் பதிலளித்துக்கொண்டிருந்தவர், உங்களுக்கு எம்பி பதவி கொடுக்கப் போறதா ஒரு பேச்சிருக்கே என்று கேட்டதற்கு "ஐயய்யோ, வேண்டாம்" என்று பதறினார்.

 

 

மரணத்திற்கு பின் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது

 

ஹீத் லெட்ஜர்

அதிக அளவு போதையில் இறந்தவருக்கு ஆஸ்கார் விருது!!

தி டார்க் நைட் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்ற ஹீத் லெட்ஜருக்கு ஆஸ்கர் விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

லெட்ஜருக்கு அளிக்கப்பட்ட விருதை அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

டிசி காமிக்ஸ்-ன் பேட்மேன் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் தி டார்க் நைட்.

இந்தப் படத்தில் ஹீத் லெட்ஜர் கிலௌன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம், போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார்.

எனினும் அவரது நடிப்பை போற்றும் வகையில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஹீத் லெட்ஜரின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
இது ஹீத் லெட்ஜரின் சாதனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்று அவரது தந்தை கிம் லெட்ஜர் தெரிவித்தார்...

No comments:

Post a Comment