Thursday 5 February 2009

எச்சரிக்கை காதலர்களே! உஷார்!

காதலர்களே உஷார்!!!

கண்ட இடங்களில் கண்மூடித்தனமாக காதலிக்கும் காதலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .வருகிற 14 ஆம் தேதி அல்லாக் காதலர்களும் அமுக்கி வாசிங்க.நாங்களுமா நீங்களுமான்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது.

எங்கேன்னு கேக்கறீங்களா?
நம்ம கலாச்சாரத்தலை நகரம் பெங்களூரூவில்தான்!!

என்ன சங்கதின்னு கேக்கிறீங்களா?
கல்யாணம் பண்ண முடியாமல் கன்னா பின்னான்னு பீச்சு,பார்க்குன்னு மணிக்கணக்கில் காதல் கடலை உடைப்பவர்களையும்,பலவித தமிழ்ப்பட காதலர் போஸ்களில் கட்டுண்டு மெய்மறந்து கிடக்கும் காதலர்களுக்கும் ராம சேனா சார்பில் ஆன் தி ஸ்பாட் கல்யாணம் நடத்திவைக்கப்படுமாம்.

காதலர் தினம் கொண்டாடக்கூடாது, அது கிறிஸ்துவ பாணியில் செய்யப்படுவது.இந்தியர்கள் கடைப்பிடிக்கக் கூடாதுன்னும் சொல்லி இருக்காங்க.

சொன்னதோட நின்னா பரவாயில்லை.அவர்கள் அமைப்பு பொதுக்குழு கூடி
கலந்து முடிவு பண்ணி தீர்மானம் நிறைவேற்றி அவங்க அமைப்பு சார்பில் 5 குழு உருவாக்கி இருக்காங்க.

அந்த 5 குழுக்களும் வீடியோ காமிராவோட(பாருங்க வீடியோ செலவும் மிச்சம்),தாலிக்கயிறுகளுடன் சுத்துவாங்க.

அப்படியே காதலர்களை கையும் மெய்யுமா பிடித்து தாலியைக்கட்ட வைப்பாங்க! தாலி கட்டச்சொன்னாக் கூட பரவாயில்லை. ரெஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கும் கூட்டிப்போய் பதிவும் பண்ணிக்குடுத்துவிடுவார்கள்(ஃஃஃபீஸ் அவங்களே கட்டிவிடுவாங்களேன்னு கேக்கிறீங்க அதானே! அது நேரில் போய் தெரிந்து கொள்க.)

கல்யாணம் பண்ணமுடியாம வருடக்கணக்கில் பீச்சுகளிலும், பார்க்குகளிலும் உருண்டு கிடக்கும் மக்கள் துணிந்து போகலாம்.கல்யாணம் பண்ணிவிட்டு அந்த அமைப்பிலேயும் சேந்துகிட்டீங்கன்னா வீட்டாளுங்க ஒன்னும் பண்ண முடியாது..

கண்ணாலே காதல் கவிதை படிச்சு(படிப்பை மறந்து) திரியும் சின்னப்பசங்களும்,தள்ளு முள்ளு கேசுகளும் மறந்தும் வீட்டை விட்டு வெளியே போயிடாதீங்க. அன்னைக்கு லீவைப்பொட்டுட்டு சமத்தா வீட்டில உக்காந்து டி.வி.பாருங்க

எச்சரிக்கை தேவா..

No comments:

Post a Comment