ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தை
நட்சத்திரங்களுக்கு விரைவில் புது வீடு கிடைக்கும்
என்று அரசியல்வாதிகளின் அறிக்கைகள்
வரத்துவங்கியுள்ளன!
பந்த்ரா குடிசைப்பகுதியில்தான் படத்தில் நடித்த அசார்
வசிக்கிறான். அவனுடைய பெற்றோர் விரும்புவது
எல்லாம் ஒரு நல்ல வீடு. இவர்கள் வசிப்பது
டெண்ட்போன்றது!
2 மாதாதிற்கு ஒரு முறை மும்பாய் முனிசிபல்
புல்டோசர் கொண்டு பொறம்போக்கில் கட்டிய வீடுகள்
என்று இடித்துத்தள்ளுவதும் பின் இவர்கள்
கட்டிக்கொள்வதும் வாடிக்கை.
ரூபினாவின் வீடும் இங்குதான்
உள்ளது,அவர்களுக்கும் இதே நிலைதான்!!
படத்தின் வெற்றியை தங்களுக்குச் சாதகமாக
மாற்றிக்கொள்ளப்பார்க்கும் லோகல் காங்கிரசார்
முதல்வரிடம் இவர்களுக்கு வீடு
வழங்கக்கோரியுள்ளனர்..
முதல்வரோ பிடி கொடுக்காமல் பேசியுள்ளார்.
படத்தின் புகழ் மறைவதற்குள் நடந்தால் உண்டு!
இந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,
பதக்கம்,பரிசுகளை வெல்லுவதும்,அதனை
இந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்
கொண்டாடுவதும் இந்தியாவின் சாபக்கேடு!
படத்தின் முக்கிய கருவைக்கருத்தில் கொண்டு
இத்தகைய நிலை மாற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதுவே படத்தின் சாதனை.அப்படி ஏதாவது நடந்ததா
என்றால் இல்லை.
நாயகனும் நாயகியும் ஈடுபாட்டுடன் நடித்து ஜோடியாக
படத்தின் புகழ் பரப்ப வெளிநாடெல்லாம்
சுற்றுகிறார்களாம். காதல் வேறாம்.
இந்த விசயங்களில் செலுத்தும் கவனத்தை
குழந்தைகளின் எதிர்காலங்களில் செலுத்துவார்களா?
ஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்
கபூர்.ஏ.ஆர்.ரஹ்மான்,மேலும் பணக்காரர்களாக
ஆனதுதான் மிச்சம்.
கோலாகலமாக வெற்றியை கொண்டாடும் போது அதே
நகரத்தில் இத்தகைய சேரிகளும் உள்ளன என்று
இவர்கள் சிந்திக்கவே இல்லையா? அல்லது படம்
இவர்களை பாதிக்கவே இல்லையா?
படத்தைப்பார்த்து உருகி பரிசு வாங்கவேண்டும்!!என்ற
நோக்கத்தில் ஆஸ்கார் தேர்வுக்குழுவுக்காக மட்டும்
எடுக்கப்பட்டதா இந்தப்படம்??
No comments:
Post a Comment