ஃபாஹிம் அன்சாரி,சஹாபுதீன் ஆகிய இரண்டு இந்தியர்களின் உதவியுடந்தான் மும்பை தாக்குதல் நட்ந்து உள்ளது!!!
இவர்கள் இருவரும் சி.பி.ஆர்.எஃஃப் முகாமின் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டவர்கள்!
மும்பையை சுமார் 59 மணி நேரம் செயலிழக்கச்செய்த குண்டு வெடிப்புகளில் குற்றம்சாற்றப்பட்டுள்ள 46 பேரில், அஜ்மல் அமீர்கசாப், ஃபாஹிம் அன்சாரி, சபாபுதீன் அஹமதுஆகிய மூன்று பேர் மும்பை மாநகரக்காவல்துறையின் கட்டுப்பாட்டில் நீதிமன்றக்காவலில் உள்ளனர்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போதுபாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 9 பயங்கரவாதிகள்கொல்லப்பட்டுவிட்டனர். இதன் முக்கியச்சதிகாரரும் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சிஅளித்தவருமான லாக்வி உள்ளிட்ட மேலும் 35 பேர்தேடப்பட்டு வருகின்றனர்.
ஹபீஸ் சையது, அபு அல் காமா, ஜரார் ஷா,காஃபா, யூசுப் என்ற முஜாமிஜ், அபு ஹம்ஜா,ஹமாத் அமீன் சாதிக், ஜாவெத் இக்பால்,எம்.டி. ரியாஸ் ஆகிய பயங்கரவாதிகள் தீவிரமாகத் தேடப்படுகின்றனர். இவர்கள்பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்த பிறகு நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களைச்சந்தித்த சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், "வழக்கு விசாரணையை ஆறுமாதங்களுக்குள் முடிக்க முயற்சிப்போம்." என்றார்.
பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள்ஆகியோர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சாட்சிகள்குற்றப்பத்திரிகையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அன்சாரி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் இஜாஸ் நாக்வி, தனது கட்சிக்காரரைஅமெரிக்காவின் உள் புலனாய்வு அமைப்பானஎஃப்.பி.ஐ. அதிகாரி குறுக்கு விசாரணை செய்யஅனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.என்ன அடிப்படையில் எஃப்.பி.ஐ.க்கு அனுமதிதரப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
.
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அப்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல்கசாப்பிற்கு எதிராக 12 வழக்குகளை குற்றப் பிரிவுகாவல்துறையினர் பதிவு செய்தனர்.
இந்தியதண்டனைச் சட்டத்தில் கொலை, கொலைமுயற்சி, திருட்டு, நாட்டிற்கு எதிராகப் போர்தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும்,குற்ற நடைமுறைச் சட்டம், ஆயுதங்கள்,வெடிபொருட்கள் சட்டம் உள்ளிட்ட வேறுபலசட்டங்களிலும் அஜ்மல் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகள் கடல் வழியாக வந்து இறங்கியதுமுதல் நாரிமன் இல்லம், தாஜ், டிரைடன்ட்நட்சத்திர விடுதிகள், கேஃப் லியோபோல்ட், சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறுஇடங்களில் அவர்கள் நடத்திய தாக்குதல்கள் வரைநேரில் பார்த்த சாட்சிகள், விசாரணை நடத்தியபல்வேறு புலனாய்வு அமைப்புகள் ஆகியோர்தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தான் பயிற்சி பெற்றது முதல்மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம்தேதி காவல்துறையால் தான் கைதுசெய்யப்பட்டது வரை தனது பயணம் குறித்துஅஜ்மல் கசாப் அளித்துள்ள ஒப்புதல்வாக்குமூலமும் குற்றப் பத்திரிகையுடன்இணைக்கப்பட்டுள்ளது.
ஃபாஹிம் அன்சாரியிடம் பயங்கரவாதத் தாக்குதல்வரைபடம் தயாரிக்கச் சொன்ன சஹாபுதீன்அஹமது, குற்றப் பிரிவு காவலர்களிடம்அண்மையில் அளித்துள்ள 40 பக்க ஒப்புதல்வாக்குமூலத்தில், பாகிஸ்தான் உயரதிகாரி கர்னல்கயானியைத் தான் சந்தித்து ஆலோசனைகளைப்பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுவும் குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது.
ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்படைமுகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாககடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபாஹிம்அன்சாரியை உத்தரப்பிரதேசக் காவல்துறையினர்கைது செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு 26/11 தாக்குதலில்பங்கிருப்பதை ஒப்புக்கொண்டார்.
சஹாபுதீன் அஹமது கூறியதன் பேரில்,மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகள், சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் உள்ளிட்ட இலக்குகளைதானே தனது கையினால் வரைந்து கொடுத்ததாக விசாரணை அதிகாரிகளிடம் ஃபாஹிம்கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 2004 முதல் அக்டோபர் 2007வரை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.இன் தலைவராகவும், தற்போது பாகிஸ்தான்இராணுவத் தளபதியாகவும் உள்ள ஜெனரல்பர்வேஷ் அஷ்ஃபாக் கயானியை தான் சந்தித்ததாகசஹாபுதீன் அஹமது ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2002இல் பாகிஸ்தான் இராணுவநடவடிக்கைகளின் தலைமை இயக்குநராக இருந்தகயானி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பின்னால் உள்ள சதிகாரர்களில் ஒருவர் என்றும்,அவர்தான் மும்பையில் தாக்குதல் நடத்தசஹாபுதீனிற்கு வழிகாட்டியவர் என்றும் அரசுவழக்கறிஞர் உஜ்வால் நிகாம் நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளார்..
பாகிஸ்தானின் கடல்பகுதி தீவிர ரோந்தில் இருப்பதால் எந்ததீவிரவாதியும் பாகிஸ்தான் கடல் வழியாக இந்தியா செல்லவில்லை என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது!!!
இன்னும் சிறிது நாளில் பாகிஸ்தானுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று இந்தியாவே சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!
No comments:
Post a Comment