வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையின் 14 பிரதிநிதிகள் அடங்கிய குழு அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
முன்னதாக,
இன்று காலை டாக்காவில் உள்ள வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர் தங்கள் மேலதிகாரிகளை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டனர்.படிக்க என் பதிவு--
. இதனால் பதற்றம் அதிகரித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர டாக்கா கண்டோன்மென்டில் உள்ள ராணுவத்தினரை எல்லைப் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் அந்நாட்டு அரசு குவித்தது.
இன்று மதியம் வரை இரு தரப்பினருக்கு இடையே கடுமையான மோதல் நடந்தது. ஹெலிகாப்டரில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில், பிரதமர் ஷேக் ஹசீனா அனுப்பிய 4 உறுப்பினர்கள் கொண்ட தூதுக் குழு ஜஹாங்கீர் கபீர் நானக் தலைமையில் சென்று, வங்கதேச எல்லைப்படை தலைமை அலுவலகத்தில் வீரர்களுடன் பேச்சு நடத்தியது.
இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேச வங்கதேச எல்லைப்படையின் தரப்பில் 14 பிரதிநிதிகள் கொண்ட குழு, தூதுக் குழுவினருடன் பிரதமர் இல்லத்திற்கு சென்றது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஜமுனா குடியிருப்பில் வங்கதேச எல்லைப்படையின் பிரதிநிதிகள் குழு மாலை 4 மணியளவில் பிரதமர் ஹசீனாவை சந்தித்து பேசியது. எனினும் இதில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் செய்தியாளரிடம் பேசுகையில், கலகத்தை கைவிட வேண்டுமென்றால் தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதுடன், தலைமை அலுவலகத்தை சுற்றிக் குவித்துள்ள ராணுவத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அதன் பின்னர் தங்களுடன் பிரதமர் நேரடியாகக் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.
இதேபோல் மற்றொரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கூறுகையில் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தலைமை அலுவலகத்தை தரைமட்டமாக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment