Thursday 26 February 2009

ஊசி பீதி!!!

 

குஜராத் மாநிலத்தில் மொடாசா என்ற

பகுதியில் ஹெபடைடிஸ் பி,நோய் தாக்கியுள்ளது.

 

பயன்படுத்தப்பட்ட ஊசி,சிரிஞ்சுகளை ஒரு கும்பல்

கழுவி அடைத்து புதிய சிரிஞ்ஜ் என்று விற்பனை

செய்து வந்து உள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது..

 

இதுவே இந்நோய் மிக வேகமாகப்பரவிய காரணம்

என்று தெரிகிறது!

.

பொதுவாக தரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு

வருவதால் உபயோகப்படுத்தப்பட்ட ஊசி குழல்கள்

மறு சுழற்சி செய்யப்பட்டு, குடம், மலிவான

பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படும்.

 

இதனால் இதனை வியாபாரிகள் வாங்கி விற்பது

வழக்கம்.சிராஜ் என்ற வியாபாரி பயன்படுத்தப்பட்ட

ஊசிக்குழல் வியாபாரி.

 

இவர் தினமும் ஆஸ்பத்திரிகளில் இதனை வாங்கி

பெரிய வியாபாரிகளிடம் விற்று உள்ளார்.

 

12 குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடியாக நடத்திய

சோதனையில் லட்சக்கணக்கான ஊசி குழல்கள்

கண்டுபிடிக்கப்பட்டன..

 

இதன் அடிப்படையில் சபர்கந்தா பகுதியில் உள்ள 5

மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.

 

வியாபாரி சிராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு

உள்ளது..!!!!

 

இது ஒரு குறிப்பிட்ட குஜராத்தில் மட்டும் உள்ள

பிரச்சினை அல்ல. நாடு முழுவதும் உள்ள பிரச்சினை.

 

நாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று

தெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்

பற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்

கையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்

இருக்கத்தான் செய்யும்.

 

கலெக்டர்களும், மந்திரிகளும் மருத்துவக்கல்லூரிகள்

திறப்பதிலும், பத்திரிக்கைச் செய்திகளில்

இடம்பெறுவதிலும் காட்டும் ஆர்வத்தை விட்டு விட்டு

சற்று இந்த மாதிரியான விவகாரங்களில் கவனம்

செலுத்துவது நல்லது.

 

ஏனெனில் கல்யாணவீட்டில் மாப்பிள்ளையும்

இவுங்கதான்!! செத்தவீட்டில் பிணமும் இவுங்கதான்!!

No comments:

Post a Comment