வழக்கொழிந்த சொற்கள் தொடர் பதிவுக்கு நம்ம
செய்யது கூப்பிட்டார். ஏற்கெனவே நிலாவும்
அம்மாவும் உங்களுக்குப்பிடித்த நபர் னு ஒரு
தொடர் பதிவுக்கு அழைத்து அதப்பத்தி இப்பத்தான்
போட்டேன்!
தொடர் பதிவுக்கு நான் அழைத்து டிமிக்கி
கொடுக்கும் (காணாமல் போன சொற்கள் போல
இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???)
ஜமால்,
செய்யது,
அபு அப்ஸர்
ஆகியோரை எங்கு கண்டாலும் உடன் தகவல் தரவும்
(எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!).
ஏன் சொல் உபயோகமில்லாமப்போகுதுன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு!
காரணம் யாராவது சொன்னா நல்லா இருக்கும்!
கீழே உள்ள சொற்கலெல்லாம் கூட உபயோகத்தில் இல்லையாம்!
அகன்றில்-ஆண் அன்றில் பறவை
அகப்பு-ஆழம்
அகளி-மண் ஊறுகாய் ஜாடி
அதள்-தோல்
இட்டரை- இரு புறமும் வேலிகள் உடைய குறுகிய பாதை. பெரும்பாலும், ஒரு மாட்டு வண்டி மட்டும் செல்லத்தக்க அகலத்தில் இருக்கும்.
அஃகரம்- தாவர இனம். வெள்ளெருக்குச்செடி
அகன்மணி-அகலமான இரத்தினம்
அக்கணா-தான்றி மரம்
அக்காரம்-ருத்திராட்ச கொட்டையால் ஆன மாலை
அதர்-வழி
அஃகம்-தானியம்
அலரி-அரளி
அசகம்-ஆடு
அகங்கை-உள்ளங்கை
அடலை-போர்க்களம்
இப்படியே ஏகப்பட்டது இருக்குங்க! எனக்குத்தெரிந்து சில சொல் எங்க ஊரிலேயே காணோம்!
அவை கீழே!
வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல்
பிருமணை-பானைக்குக்கீழ் வைக்கும் ரிங்க் போல உள்ளது!
வாங்குப்பலகை-குளிக்க, சமைக்க அமரும் சிறிய மரப்பலகை
சொளகு,சொலகு-அரிசி புடைக்கும் முறம்
கொட்டான்- பனை ஓலையில் செய்த சின்ன கின்னம் போல்
கடகம்- பெரிய பனை ஒலைப்பெட்டி
வாங்கருவா-தொரட்டி போல் மரத்தின் உயரத்தில் இருக்கும் காயைப்பிடுங்க உதவும் அரிவாள்+ நீண்டகம்பு
குதிரைவல்லி-ஒருவித சிறிய தானியம்-முன்பு அரிசியில் கலந்து வரும்.
பனங்கை-பனைமரம் வெட்டி சீர் செய்த துண்டு! குடிசை போட வாங்குவர்.
செய்-வயல்..
இவற்றில் சில இன்றும் கிராமப்புறங்களில் உண்டு!!
அதே மாதிரி இதுக்கும் தொடர் பதிவு உண்டாம்!!
விதிப்படி குறைந்த பட்சம் 3 பேரைக்கூப்பிட வேண்டுமாம்!
நம்ம கொஞ்சம் அதிகபட்சம்தானே!இதோ நான் அழைப்பவர்கள்-
வேத்தியன் -வேத்தியன் பக்கம்
நிலாவும் அம்மாவும்-நிலா எழுதும் கடிதாசி!
அன்புமணி-இலக்கியா
இயற்கை-இதயப்பூக்கள்!
மிஸஸ்.டவுட்- மிஸஸ் டவுட்
அருணா-அன்புடன்அருணா!
கவின்-கவின்
+
ஜமால்,
செய்யது,
அபு அப்ஸர்
இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்!
தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!
தேவா.
No comments:
Post a Comment