Thursday 19 February 2009

வக்கீல் போலீஸ் மோதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி  மீது முட்டை வீசப்பட்டது. வக்கீல்கள் சிலர் தகராறு செய்தனர். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று சு. சாமி காலையில் ஆஜரானார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சு.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது முற்றி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல்வீசப்பட்டது.

இதனையடுத்து வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். வக்கீல்கள் பலருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பல கார்கள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வளாகத்திலிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி வக்கீல்களை விரட்டினர். ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தனர்.

மாலை 3 மணி முதல் 4.30 வரை இந்த பரபரப்பும், போராட்டமும் நடந்தது. மேலும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை வக்கீல்கள் தாக்கினர். அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மோட்டார் பைக்குகளுக்கும் தீ வைக்கப்பட்டது. போலீஸ் ஸடேஷனுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐகோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு : போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நொறுக்கினர். ஆவணங்களுக்கு தீ வைத்தனர். மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதில் ஜட்ஜ் ஆறுமுக பெருமாள் ஆதித்யன் தலையில் காயம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது!

மக்கள் டிவியில் இந்நிகழச்சி விரிவாகக் காட்டப்பட்டது.

No comments:

Post a Comment