Thursday, 19 February 2009

கொஞ்சம் தேநீர்-10-நீயிட்ட கோலம்!

 

நீ கோலமிடக்

குனிந்தபோது,

காற்றில் அசையும்                      

உன்

கூந்தலிலும்

காதலின் நளினம்!

 

வாசலில் மின்னும்

நீயிட்ட                                       

புள்ளியெல்லாம்

நட்சத்திரமாய்!

 

தெருவெங்கும்

வளைத்து                           

வளைத்து நீ

வரைந்த கோலம்

விரிந்தது

வானவில்லாய்!

 

நீ கோலமிட்டு                                         

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!

 

 நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த                                                       

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.

 

கொஞ்சம்  கீழே  பாரடி,

நீ பாதம் வைத்த                                                             

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!

 

உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்.

 

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!

19 comments:

Anonymous said...

வாங்க வேத்தியன்!

Anonymous said...

அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ!!! சூப்பருங்க‌

Anonymous said...

அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ!!! சூப்பருங்க‌//

நன்றி கலை! வருகைக்கும்
கருத்துக்கும்!

Anonymous said...

கால தாமதமத்திற்கு மன்னிக்கவும்.

இன்று நான் அலுவலகத்திற்கே செல்லவில்லை.

வழக்கம் போல உங்கள் தேநீர் விருந்து அருமை...

Anonymous said...

//// நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.////

தேவா தெரிகிறார்.

Anonymous said...

செய்யது,
வீ மிஸ்ட் யூ!

Anonymous said...

கோலமிடும் இளம் பெண்களைக் காணக் கண் கோடி வேண்டும். வைக்கும் புள்ளிகளும் இழுக்கும் கோடுகளும் குனிந்தும் நிமிர்ந்தும் கோலமிடுவதும் ..... அடடா அடடா
அருமை அருமை - கவிதை அருமை

Anonymous said...

//thevanmayam சொன்னது…
செய்யது,
வீ மிஸ்ட் யூ!
//

அப்படியா....எனக்கும் தாங்க..

ஒரு நாள் வலைப்பக்கம் வரலனா ஏதோ ஒரு உலகத்தை மிஸ் பண்ண மாதிரி ஒரு
ஃபீலிங்..

இருந்தாலும் நம்ம சகாக்கள் கடமையை சரியாக செய்து விடுவதால் வருத்தமில்லை.

Anonymous said...

125

Anonymous said...

சரி லேட்டா வந்தாலும் நமக்குனு ஒரு இடம் ஒதுக்கி வைக்காமலா போய்ட போறீங்க..

தோ வருது ஒன்னே லெக் செஞ்சுரி..

Anonymous said...

//
நீ கோலமிடக்
குனிந்தபோது,
காற்றில் அசையும் உன்
கூந்தலிலும்
காதலின் நளினம்!
//

தென்றலுக்கு தான் அந்த நளினம் சொந்தம்!!!

Anonymous said...

//
வாசலில் மின்னும் நீயிட்ட
புள்ளியெல்லாம்
நட்சத்திரமாய்!
//

வானமே வெறித்து விட்டதோ?
களவு போன நட்ச்சத்திரத்தை
தேடி தேடி???

ம்ம்ம்ம், ரொம்பதான் நல்லா இருக்கு!!!

Anonymous said...

//
தெருவெங்கும்
வளைத்து
வளைத்து நீ
வரைந்த கோலம்
விரிந்தது
வானவில்லாய்!
//

இது ரொம்ப அருமை தேவா!!

கண்கள் முன்னே வானவில் தான்
தோன்றுகிறது.

Anonymous said...

//
நீ வாசல்
திரும்பும் முன்
பார்த்த
பார்வையில்
தெறித்தது
ஆயிரம் மின்னல்.
//

அட Suuuuuuuuuuuuuuper!!!

Anonymous said...

//
கொஞ்சம் கீழே பாரடி,
நீ பாதம் வைத்த வாசல்
மண்ணெல்லாம்
தங்கத்துகள்களாய
மாறுவதை!!
//

ஆஹா தேவா இதுதான்
தேவா பஞ்ச் !!

கலக்கிட்டீங்க அருமையான
வரிகள், நேர்த்தியாக ரசித்து
எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

தேவா,சுகமில்லைன்னு உங்ககிட்ட வாறவங்களுக்கு என்ன மருந்து கொடுத்து அனுப்புறீங்க.நீங்க இப்பிடிக் காதல்ல முழுகிப்போய்க் கிடக்கிறீங்களே.

Anonymous said...

யாருங்க அவங்க?உங்க அவங்களா?கொஞ்சம் காய்ஞ்ச மிளகாயும்,உப்பும் எடுத்து சுத்திப் போடுங்க.உங்க கண் அவ்வளவும் பட்டுப்போச்சு.

கவிதை வர்ணனை அருமை.

Anonymous said...

காதல் கோலம் வழியா துள்ளி விளையாடுது

Anonymous said...

டாக்டரே....கண் டாக்டர் போயி பார்க்கணும் போல இருக்கே....எதுவுமே சரியா தெரியலியோ.....மண்ணு தங்கமா தெரியுதாம்.....அம்மணி நெளிவு கோலம் போட்ட, அது வளைவா வானவில்லா தெரியுதாம்.....சரி இல்லியே...

சரி அதெல்லாம் இருக்கட்டும்....இப்டி கண் கட்டு வித்தை செய்யுற அம்மணி ஆரு?

சூப்பர் !!

Post a Comment