சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு சென்ற அரசு வழக்கறிஞர்கள் 10 பேர் தற்காலிகமாக சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்!!
இன்று தொடர்ந்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்ட ஏராளமான வழக்கறிஞர்கள்கறுப்புக்கொடி ஏந்திய படியே கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே இன்று காலை அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா தலைமையில் அரசு வழக்கறிஞர்கள்தண்டபாணி, கிருபானந்தம், தங்கவேலு, செந்தில் உள்பட 10 பேர் நீதிமன்றத்துக்கு சென்று அரசு சார்பில் ஆஜரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்ற அரசு வழக்கறிஞர்கள் 10 பேரை சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்றும்அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பால்கனகராஜ், பிரபாகரன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும். சங்கம் எடுத்த முடிவை மீறி நீதிமன்றத்துக்கு சென்ற அரசு வழக்கறிஞர்கள் 10பேரை தற்காலிகமாக சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment