Friday 13 March 2009

முருகா காப்பாத்து!!

 

மயில் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவற்றின் தோகையும், அழகும்தான்!!

அதுக்கடுத்து அது ஏதோ நமக்கே சொந்தம் என்ற எண்ணமும் கூடவே நமக்கு வருகிறது!!

கொஞ்சம் நாளா மயில்கள் சாவு!! மயில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது! அப்படீன்னு செய்திகள் பார்க்கிறோம்!!

ஆமா! மயில் நம் தேசிய பறவை என்பது போக அழியும் நிலையில் உள்ள பறவையும் கூட!!!

இப்பக்கூட ஜெயங்கொண்டம் அருகில் 4 மயில் செத்துப்போனதாக படிக்கிறோம்!!

எல்லாப் பகுதிகளிலும் மயில்கள் உணவுக்காக வேட்டையாடப்படுது என்பதுதான் கொடுமையான விசயம்..

இதை யார் கண்கானிப்பது?

காடுகளில் வாழ்ந்த மயில்கள் காடுகள் அழிந்து வருவதால் ஊர்பக்கம் வருகிறது!! காட்டிலென்றால் வனத்துறை பார்த்துக்கொள்வார்கள்!

ஊர்கள் நகரங்களில் பாதுகாப்பு இல்லாத நிலையில் மயில்களின் நிலை அதோகதிதான்!!

ரோடில் எல்லோரையும் கடித்து ஏகப்பட்ட ஆட்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் தெருநாய்களை கொஞ்ச நாள்களா பிடிக்கவோ, அடிக்கவோ கூடாதுன்னு புளூ கிராஸ் கொடி பிடிக்கிறார்கள்.

நீதிமன்றமும் அதை சரி என்று சொல்கிறது. வெறிநாய் மருந்துக்கு ஆகும் செலவும்,நாய்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கூடியதுதான் மிச்சம்!!

ஆனால் மயில் பற்றி விழிப்புணர்வு இன்னும் வரவில்லையே!!

என் நோயாளி ஒருவனிடம் புறா வேண்டும் வளர்க்க என்று கேட்டேன்.. அவன் சார் மயில் குஞ்சு இருக்கு வளர்க்கிறீர்களா என்றான்.. டேய்! மயிலைப் பிடிக்கக்கூடாதுடா என்றேன்!!

அவனுக்குத்தெரியவில்லை! ”புடிக்கலாம் சார்! யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க!” என்றான்!

சட்டப்படி குற்றம் தெரியுமா என்றேன்!!” அட போங்க சார் புதுசா கதை சொல்றீங்க” நாங்க எவ்வளவு நாளா புடிக்குறோம்!!அதெல்லாம் புடிக்கலாம். “ என்றான்..

”மயில் கறி சாப்பிடலாம், தோகையை வித்துடலாம் ”என்றான்!

ஏண்டா!” தோகை மயில் செத்தவுடனேதானே எடுப்பீங்க” என்றேன்!

சார்” நீங்க வேற!! மயில் எப்ப சாவது? நாங்க வெயிட் பண்ண முடியாது! நான் விட்டா இன்னொருத்தன் பிடிச்சிடுவானே. என்ன பண்றது” என்றான்..

ஆமாம் பழமொழி கூட “மயிலே மயிலேன்னா இறகு போடாதுன்னு”ல்ல சொல்றோம்! அர்த்தம் இப்பத்தான் புரியுது எனக்கு! (இந்த அர்த்தம் உங்களுக்கு முன்பே தெரியுமா நண்பர்களே?). அதாவது மயிலே மயிலேன்னா இறகு போடாது!! அதை அடித்துத்தான் நாம் பிடுங்க வேண்டும்.. நேரடி அர்த்தம் ரொம்ப கொடுமையா இருக்கே!

அட ஆமா! மயில் தோகை விசிறியெல்லாம் விக்கிறான்களே? தோகை என்ன அரசாங்கத்திடம் வாங்குகிறார்களா  என்ன!!

இதை ஒரு வியாபாரமா செய்து வருகிறார்களே!

மயில் தோகை மயிலிடம் இருந்தால்தான் அழகு!

நம்ம தனியா கிருஷ்ணன் தலையிலும், விசிறியிலும் இல்ல வச்சு அழகு பார்க்கிறோம்..காலையில் கடைகளுக்கு சாம்பிராணி போடுகிறவணும் கையில் துடைப்பம் மாதிரி மயில் தோகையை வச்சு இருக்கானே! நமக்கு சிந்தனையே வரலையே!!

எனக்கே வருத்தமாக இருந்தது!!

”டேய்!! மயிலைப் பிடிக்காதே! உன்னையப் பிடிப்பானுங்க, அப்புறம் பெரிய தப்புடா இது” என்றேன்.

வெளியே பாட்டுடன் மலைக்குப்போய்க் கொண்டு இருந்தார்கள்!! சார் இப்படி வாங்க என்றான் அந்த மயில் பிடிக்கும் பேசண்ட்!!

போய் பார்த்தேன்!!பக்தர்கள் காவடி தூக்கிக்கொண்டு போய்க்கொண்டுஇருந்தார்கள்!!!

”பார்த்தீங்களா!! காவடில எவ்வளவு தோகை சொருகியிருக்கிறார்கள்! புடிக்கிறதுன்னா அவங்களையில்ல பிடிக்கணும்” என்றான்..

அட ஆமாம்!!! பக்தி வெள்ளத்தில் முருகனின் வாகனத்தையே காலி பண்ணி அந்தத்தோகையை சொருகி முருகனுக்கே காவடியா?

அவனைப்பார்த்தேன்! என்னால் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை!!

மயில்களை யார் காப்பது? நாமா? அரசாங்கமா?

இல்ல முருகன்தான் காப்பாத்தனுமா?

No comments:

Post a Comment