சமீபத்தில் நடந்த உயர்நீதிமன்ற நிகழ்வுகள் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் சில உள்ளன. அவற்றில் என் கருத்துக்கள் சிலவற்றை கீழே அலசுகிறேன்!!சரியா தவறா என்று தவறாமல் சொல்லவும்!
1.போலீஸ் துறை செய்தது சரிதானா?
போலீஸ் துறை செய்தது சரிதான் என்றால் போலீஸார் அமைதியான முறையில் கைது செய்து இருக்கலாம்.
இதே போலீஸ் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் அமைதியாக வேடிக்கை பார்த்ததே! எல்லா நேரமும் ஒரே போல் நடவடிக்கைகளை எடுத்தால் அவர்களை நாம் பாராட்டலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் முன்னரே திட்டமிட்டார்போல் அல்லவா தெரிகிறது!!
2. போலீஸ் ஒரு வளாகத்தில் நுழையும் போது அத்துறையின் தலைவருடன் பேசிவிட்டே நுழைவர். இது ஒரு பொதுவான கருத்து!
கல்லூரி வளாகங்களில் கூட முதல்வரிடம் போலீஸ் உயர் அதிகாரி கலந்து ஆலோசித்த பிறகே உள்ளே வருவர்.அதிலும் அடிதடி இருக்காது!!
3.தற்போது சில வருடங்களாக போலீஸ் துறை தட்டிக்கேட்க ஆளில்லாத துறையாக மாறிவருகிறது!!
அவர்கள் வன்முறையை ஏவி விடுவதும் அதிகமாகவே உள்ளது! எந்த துறையையும் விட அதிக ஊழல் இதில்தான்.ஏனெனில் கேட்க ஆளில்லை!!அவர்களைக் கேட்கும் உரிமை நீதிதுறைக்கு மட்டுமே இருக்கிறது!
நான் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது வளாகத்தில் நுழைந்து பைக்கில் சென்ற மருத்துவரை சோதனை செய்தார் காவலர் ஒருவர். வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு காவலரை கல்லூரி தூணில் கட்டிவைத்து விட்டார் மருத்துவர். பின் டி.எஸ்.பி. எஸ்.பி. வந்து விசாரித்ததில் போலீஸ் மது அருந்தி வசூலில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மாற்றப்பட்டார்..
இதுபோல் இப்போது நடக்குமா என்று தெரியவில்லை!
பாகிஸ்தானில் முஷ்ரஃப் அரசு நீதிபதிகளைக் கைது செய்தது. அப்போது வக்கீல்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்! ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.20000 வக்கீல்களை சிறையில் அடைத்தது அரசு. நடந்த்து என்ன? அவசர நிலை பிரகடனம் செய்தார் முஷ்ராப்!
கடைசியில் சர்வதேச அமைப்புகள்,நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அமெரிக்காவின் தலையீட்டில் பதவி இறங்கினார்..
ஒரு நாட்டின் சரித்திரத்தியே நீதித்துறை மாற்றி எழுதியது!!
4.போலீஸை எதிர்க்க தற்போது யார் இருக்கிறார்கள்?
பொதுமக்கள்-முடியாது
பொறியாளர்கள்-முடியாது
மருத்துவர்கள்-முடியாது
தனிதொழில்துறையினர்-முடியாது
அரசு அதிகாரிகள்-முடியாது
கட்சிகள்--முடியும்
வக்கீல்கள்-முடியும்!!!
வக்கீல்கள் போல தொடர்ந்த போராட்டத்தில் யார் ஈடுபடுகிறார்கள்?
இரண்டு மாதகாலம் தங்கள் வருமானத்தை விட்டு யாராவது போராடுவார்களா?
மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் சொந்தப்பிரச்சினைக்காகவா போராடினார்கள்?
இல்லையே!! இவற்றையெல்லாம் பார்க்கும்போது வழக்கறிஞர்கள் செய்வது சரி என்றுதான் தோன்றுகிறது!!
சட்டத்தையும் நீதி ஒழுங்கையும் ஒரு துறை கையில் எடுக்கும்போது அதனைத்தட்டிக்கேட்பது மிக அவசியம்! நமக்காக அந்த வேலையைச் செய்யும் வழக்கறிஞர்கள் செய்வது சரிதான்!
இது என் கருத்து!!
உங்கள் கருத்துக்களை தாராளமாகச்சொல்லலாம்!!!
No comments:
Post a Comment