உயரமான மரங்கள் நிறைய பார்த்து இருப்போம்!
நம்ம ஊரில் அரசமரம் ஆலமரம் பார்த்து உள்ளோம்.
அதைவிட்டா அடையாறு ஆலமரம் பார்த்து
இருக்கலாம்.
உலகின் உயரமான மரங்களில் இதெல்லாம்
வரவில்லை.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள
மரங்கள்தான் உலகின் உயரமான மரங்கள்!
செம்(ரெட்வுட் )மரங்கள் தான் உலகின் மிக
உயரமான மரங்கள்! கலிபோர்னிய செம்மரங்கள்
(Sequoia sempervirens) 2200 ஆண்டுகள் கூட வாழும்.
மேலேயுள்ள மரம் செம்மரம்தான்! மாண்ட்கோமெரி
காட்டில் கலிஃபோர்னியப் பகுதியில் உள்ளது ! இதன்
உயரம்
112 மீட்டர்-367.5அடி
விட்டம் 10 அடி!
மரத்தின் அடிவாரத்தில் இடதுபுறம் நிற்கும்
மனிதர்களின் அளவைப் பாருங்கள்!! மரத்தின் உயரம்
எவ்வளவு என்பது பிரமிப்பாக இல்லை!
கீழேயுள்ள படம் ஒரு அரிய பழைய படம்!
படம் எடுக்கப்பட்ட தேதி விபரம் இல்லை!
ஆயினும் அதம் வெட்டப்பட்ட பகுதியின் அகலம்
பாருங்களேன்! எவ்வளவு பெரியது!
வெட்டிய மரத்தில் எவ்வளவு பேர் உட்கார்ந்து போஸ்
கொடுக்கிறார்கள் பாருங்கள்!
இந்தப்படம் பார்க்க எளிமையாக உள்ளது!!
சாதாரண மரத்தையே வெட்டி ஆள் மேல் விழாமல்
கயிறு போட்டு எவ்வளவு சிரமப்படுகிறார்கள்?
ஆனால் இதனை எப்படி வெட்டி ஆள் மேல் சாயாமல்
பிடித்து!!! உண்மையில் சாகசம்தான்!!
No comments:
Post a Comment