பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் கேப்டன் ஜெயவர்த்தனே, திலன் சமரவீரா, குமார சங்ககாரா, அஜந்தா மெண்டிஸ், தரங்கா பிரனவினதா, சமிந்தா வாஸ் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தார். இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் தரங்கா பிரனவிதனாவுக்கு நெஞ்சி்ல் குண்டு பாய்ந்துள்ளது. இவரது நிலைமை மோசமாக இருந்தாலும் அபாய கட்டத்தில் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உலகநாடுகள் அனைத்தும் தங்கள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளன.. சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானில் இனி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்று அறிவித்து உள்ளது.
இதைதொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச அணிகள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது!
ஒரு முறை பட்டாலே இலங்கை தன் வீம்புப்போக்கை நிறுத்திக்க் கொள்ள வில்லை.
மீண்டும் பாகிஸ்தானுக்கு தன்னுடைய படகுப்போட்டி அணியை அனுப்பவுள்ளது.
இதனை பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி நவீட் காலிக் குறிப்பிட்டு உள்ளார். பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச CAS படகுப்போட்டிகள் நடைபெறும் என்றும் திட்டமிட்டபடி இலங்கை வீரர்கள் கலந்து கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது!
நமக்கு என்ன! மீண்டும் வீரர்கள் மீது எந்தத்தாக்குதலும் இல்லாதிருந்தால் சரி!!
சரி ! இந்திய படகுப்போட்டி வீரர்கள்!
ஊஹூம்!! போகமாட்டோம்!
நாங்க உள்ளூர் குளத்துலேயே படகு விடுவோம்! தம்மட்ட நீச்சல்,கடப்பாரை நீச்சல் அடிப்போம் !!! இக்கரைக்கு அக்கரை நீச்சல் அடிப்போம்!
பதக்கத்துலயெல்லம் எங்களுக்கு ஆசையில்லைங்க.
உயிர் போனா நீங்களா குடுப்பீங்க!!
No comments:
Post a Comment