பாகிஸ்தான் போலீசார் மேலேயுள்ள தீவிரவாதிகள் பாக் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளது!!
பாகிஸ்தானில் தாக்கப்பட்ட இலங்கை வீரர்களில் தரங்க பரனவிதானாவுக்கு நெஞ்சிலும்,திலன் சமரவீராவுக்கு காலிலும் குண்டு பாய்ந்தது!!!
ஆயினும் இருவர் உயிருக்கும் பாதிப்பு இல்லை!
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 12 தீவிரவாதிகள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் 20லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள். எனினும்,இவர்களில் எவரும் முக்கியமான குற்றவாளிகள் அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தாலிபான் பயங்கரவாத அமைப்புகள் இருக்கலாம் என்று கூறியுள்ளது
இந்த தகவலை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை; எனினும், அமெரிக்காவில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான அதிகாரிகள் இப்படி சந்தேகிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதல், மனித வெடிகுண்டு தாக்குதல்கள் போன்றவற்றுக்கு பதிலாக, தற்போது பயங்கரவாதிகள் நேருக்கு நேர் நின்று தாக்குதல் நடத்தும் பாணியும் கவலை அளிக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் சம்பவம், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பாணியிலே உள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த பத்திரிகை, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களும் லூசான பேண்ட் அணிந்திருந்தனர். ஆயுதங்கள் அடங்கிய பைகளை முதுகில் தொங்கவிட்டிருந்தனர். மிகவும் சத்தான உலர் பழங்கள் மற்றும் சாக்லேட்டுகளை பையில் வைத்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment