பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நம் சங்கம் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறது!!
ஏதோ ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு வேலைகளைச் செய்து வருகிறோம்!!
ஆபிஸில் ஆணிகளைப் பிடுங்கி களைத்து வரும் நம் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு கப் காபி(தானே போட்டுத்தான்) குடித்தவுடன் விளம்பரத்தில் வரும் பொடியன்கள் போல புத்துணர்வு பெற்று, சூப்பர் மேன்களாக மாறி வீட்டில் பாக்கியுள்ள ஆணி,கடப்பாரைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருவது நம் சங்கத்தினர் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்!!
நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்!
அப்படி இருக்கும்போது பேச்சு பேச்சாத்தானே இருக்கணும்!!
பேசிக்கொண்டு இருக்கும்போதே அடிக்க வந்தால்? அதை நாம் ஒத்துக்கொள்ள முடியுமா! பயத்தில் கைகாலெல்லாம் ஆடாது? சில நேரம் அழுது விடுவோமோ என்ற நிலைக்கும் தள்ளப்படுகிறோம்!
இப்படி இருக்கும் நேரத்தில் சமீபகாலமாக் நம் சங்கத்தைச் சார்ந்தவர்களின் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது!
பாகிஸ்தானில் சமையல் செய்யவில்லை என்பதற்காக அவர் மனைவி துவைத்து எடுத்து இருக்கிறார், அதுவும் குழந்தைகள் முன்னிலையில்! இப்படி செய்தால் கணவரை எப்படி குழந்தைகள் மதிக்கும்!
1.கோபம் வந்தவுடன் பலர் முன்னிலையில் அடிக்கக்கூடாது என்பது எங்கள் முதல் கோரிக்கை!
அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை! எல்லாத்துணிகளையும் துவைக்கவிட்டு, நம் சங்க நபரின் சட்டையைக் கழற்றி அதாலேயே வீடும் துடைக்கவைத்து இருக்கிறார் அந்தப் பெண்மணி! !
2.இந்த காணொளியைப் பாருங்கள் !!
நான் சொல்வது பொய்யா?
இதைவிட ஆதாரம் என்ன வேண்டும்! நம் அப்பாவி அப்பா ஒருவர் எப்படி அடிபடுகிறார் பாருங்கள்!
இதைப் பார்த்த பின்னும் நாம் சும்மா இருக்க முடியுமா? படை கிளம்பட்டும் !! அந்த ராட்சத மனைவி இல்லாத நேரமாகப்பார்த்து நம் சங்க கணவனைப் பார்த்து வலி, வேதனையை தாங்குவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து வருவோம்! அடுத்த கூட்டத்தில் அவர் அனுபவங்களையும் எப்படி இந்த வலி வேதனையைத்தாங்கினார் என்றும் நம் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்!!
2.சரி விடுங்க விவாகரத்தாவது கொடுங்க என்று கெஞ்சியவருக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்!
இவர் விவாகரத்துதானே கேட்கிறார்! விட்டுவிடவேண்டியதுதானே! கையைக் கட்டி அடித்து உதைத்து இருக்கிறார் அந்தப் பெண்மணி!!
அதோடு விடவில்லை!! கட்டிலில் கட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்!அறை சாவி இரண்டு பேரிடமும் இருக்கும்! கஷ்டப்பட்டு எழுந்து சாவியைப் போட்டு திறக்கப் பார்த்தால் திறக்க முடியவில்லை! முன்னெச்சரிக்கையாக பூட்டையே மாற்றி வெறு பூட்டு போட்டு விட்டார் அந்த மகராசி!!
எப்படியோ போலீஸுக்கு போன் பண்ணி அவங்க வந்து அறைக்கதவை உடைத்து ஆளை வெளியே கொண்டு வந்து இருக்கிறார்கள்!!!
இந்த சம்பவத்தை நம் சங்கம் சார்பாக கண்டிப்பதுடன் இன்றிரவு உள்ள சங்க அவசர கூட்டத்திற்கு வரவும்!! நாம் தாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் அனைவரும் சங்கத்தின் முக்கிய விதிமுறைப்படி... மாறுவேடத்தில் வரவும்!!
No comments:
Post a Comment