Sunday, 15 March 2009

ரகசிய கணக்குகள் இனி இல்லையா?

சுவிட்சர்லாந்து நாடு இனிமேல் இரகசிய கணக்குகளின் விபரங்களை இரகசியமாக வைத்து இருக்காதாம்.ஓரளவு தகவல்கள் தரப்படும் என்று தெரிகிறது!

உலக நாடுகளின் வேண்டுகோள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு.

சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் போட்டுள்ள நாடு இந்தியா என்பது அனைவருக்கும் தெரியும்.அதுவும் பிறநாடுகள் போட்டுள்ள தொகையின் மொத்தத் தொகையை விட இந்தியா மட்டும் போட்டுள்ள தொகை அதிகம்!

டைம்ஸ் ஆப் லண்டன் தெரிவித்த இந்த செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏனெனில் இந்திய அரசியல் வாதிகளுடைய அந்த பெரும் பணத்தை என்ன செய்வார்கள்?

நம் மக்கள்   வேறு நாட்டு ரகசிய கணக்குகளுக்கு மாற்றிவிடுவார்கள் என நினைக்கிறேன்!

எப்படியாயினும் இது கிலியைக்கிளப்பும் செய்திதான்.

ஸ்விசுடன் லீகென்ஸ்ட்டீன்,லக்ஸம்பர்க்,அண்டோரா ஆகியவையும் இணைந்து உள்ளன. இப்படியும் நாடுகளா? வரலாறு படித்து ரொம்ப நாளாகிவிட்டது!   இந்த நாடுகளிலும் ரகசிய கணக்கு உண்டாம்! எங்கெங்கே தேடிக்கொண்டு போய் போடுராங்க பாருங்க!

ஸ்விஸ் வங்கிகளில் உள்ள பணம் நாடு வாரியாக:

இந்தியா  $1456 billion

ரஷ்யா--- $470 billion

இங்கிலாந்து------ $390 billion

உக்ரைன்  $100 billion

சீனா --- $96 billion

இது 2006 ஏப்ரல் ஸ்விஸ் அக்கவுண்ட் ரிபோர்ட்!

இது அதிகம் போட்டுள்ள நாடுகளின் பட்டியல்!!!

பட்டியலின் மிச்ச நாடுகளின் தொகையையும் இந்தியாவின் தொகையயுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.

இந்த தொகை இந்தியாவுக்கு வருமானால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்துவிடலாம்.

மிச்ச பணத்தை இன்வெஸ்ட் பண்ணினால் வரும் வட்டி இந்திய பட்ஜெட்டைவிட அதிகமாக இருக்கும், அதாவது எந்த வரியும் போடாமல்!!! அய்யா! இந்தியா ஏன் ஏழை நாடாக இருந்தது என்று இப்போது தெரிகிறதா?

   தற்போது  அரசாங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்கி தனி நபர் கணக்கின் சில விபரங்கள் மட்டும் தரப்படுமாம்.

அப்ப நாங்க ட்ரஸ்ட் பேரில் போட்டதையெல்லாம் சொல்ல மாட்டாங்கன்னுதானே அர்த்தம்.

அப்பாடி! தப்பிச்சேன்! ஆமாங்க! ஏகப்பட்ட பணம் ட்ரஸ்ட் பேரில் போட்டு இருக்கோம்ல.

நம்ம அப்புக்கள் விபரமான ஆளுங்கப்பா!

அடப்பாவிகளா! பணத்தை என்ன செய்வது என்று தெரியாவிட்டால் எங்களிடம் கொடுங்கப்பா..

எப்படியோ ஸ்விஸ் வங்கியில் உள்ள பணம் வெளியில் வரப்போவது இல்லை என்பது மட்டும் உறுதி.

No comments:

Post a Comment