Tuesday 3 March 2009

பாக் குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணம்?

லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

ஆயினும் லாகூர் கமிஷனர் குஷ்ரோ பெர்வைஸ்

கூறிய கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளன!!

பாதுகாப்புப்படை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வீர்ரகளைக்காப்பாற்றி விட்டார்கள் என்று அவர் பாதுகாப்புபடை வீரர்களைப்பாராட்டினார்...

அதுமட்டுமல்ல!!!

இந்த இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலில் வெளிநாட்டு சதி காரணமாக இருக்கலாம் என்றும்

குறிப்பாக இந்தியாவின் சதி காரணமாக இருக்கலாம் என்றும் அவதூறு பரப்பியுள்ளார்..

இதனை யாரும் நம்பப்போவதில்லை என்றாலும் உலக நாடுகள் ஆஃப்கானிஸ்தனைப்போல பாகிஸ்தானையும் தீவிரவாத நாடாக அறிவிக்கும் என்று நம்புவோமாக!

ஏற்கெனவே பாரக் ஒபாமா “பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும் தீவிரவாதத்தின் மையங்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!!

இதில் தவறு இலங்கை மேல்தான்!! இந்தியா பயங்கரவாதம் காரணமாக செல்லாத விளையாட்டுக்கு இலங்கை வம்புக்கு சென்றது!!

தற்போது வீம்பால் தன் வீரர்களின் பாதிப்புக்கு காரண்மாகி நிற்கிறது!!!!

.
இத்தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி பயங்கரவாதிகளின் நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை பயங்கரவாத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் கிலானி, இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவப்பெயர் தேடித் தருவதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment