கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன!!தோனியின் தலைமையில் இந்தியாவின் வெற்றிகளை நாம் அதிர்ஷ்டம் என்று ஒதுக்கிவிடமுடியாது..
அதிர்ஷ்டம் மட்டுமே வென்றதாக ஆஸ்திரேலியாவை அவர்கள் நாட்டிலேயேயும்,தென் ஆப்பிரிக்காவைவையும் வென்றதையும் குறிப்பிடமுடியாது.
டெண்டுல்கர் தொடர் வெற்றியைப்பார்த்து இந்திய சிரிக்கட் சரித்திரத்திலேயே இதுதான் சிறந்த அணி என்று கூறுகிறார்.
நீங்களும் நானும் ஒத்துக்கிறோமோ இல்லையோ சவுரவ் தாதா இதை ஒத்துக்கொள்ளவில்லை.இது சிறந்த அணிதான், ஆனால் இதுதான் அனைத்திலும் சிறந்த அணி என்றி கூற முடியாது என்கிறார்..
நான் கவனித்தது என்னவென்றால் சச்சின் விளையாடாவிட்டாலும் தோனி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துப்போகிறார். அவருடைய பொறுமையான டென்ஷன் ஆகாத தன்மையும் சூழ்நிலைக்கேற்ப தன் அதிரடி ஆட்டத்தை குறைத்து அணியைத் தோல்வியிலிருந்து மீட்பதும் கங்குலி, டெண்டுல்கர் இருவரிடமிருந்தும் தோனியை உயரத்துக்கிப் பிடிக்கின்றன..
என்னைப்பொறுத்தவரை நான் கண்ட சிறந்த காப்டன் தோனிதான்.....மாற்றுக்கருத்து இருப்போர் சொல்லலாம்!!
No comments:
Post a Comment