Thursday, 5 March 2009

தலை நிமிரவைத்த இந்தியன்!!!!!

 

 

 

 

      பராக் ஒபாமா  அரசில்  தலைமை தகவல் தொழில் நுட்ப அதிகாரியாக   அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்  இந்திய தொழில் நுட்ப நிபுணருமான 34 வயதான விவேக் குந்த்ரா தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இவர் அமெரிக்காவின் மிகச்சிறந்த 25 தொழில்நுட்ப வல்லுனர்களில் சிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்தியரான  பத்மஸ்ரீ வாரியர் என்ற பெண் அதிகாரியின் பெயரும் பரிசீலனையில் இருந்தது!

ஒபாமா அரசில், தொழில் நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்படும் புதிய பதவி இது.

குந்த்ரா; இந்தியாவில் பிறந்தாலும், சிறுவயதிலேயே தான் சானியாவில் படித்து வளர்ந் தவர். அமெரிக்க மெரிலாண்ட் பல் கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து, வாஷிங்டன் அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்ப தலைமை அதிகாரி யாக பணியாற்றி வருகிறார்

ஒபாமா தேர்தலின் போது தகவல் தொழில் நுட்பத்தில் அக்கறை செலுத்தினார். இணைய குழுமங்களிலும்,இணய கருவிகளிலும் அதிக ஆர்வம் காட்டினார்!

அரசாங்கம் நன்றாக செயல்பட தொழில் நுட்ப அரசு அமைக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்..

குந்த்ரா அனைத்து விதமான தகவல் தொழில் நுட்ப இணய கருவிகளை கட்டமைப்பதிலும், அனைத்து அரசு தொழில் நுட்ப செலவினங்களுக்கும் பொறுப்பாக இருப்பார்!

குறைந்த செலவில் அரசின் செய்திகளை மிகச்சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்வதே இதன் நோக்கம்!

குந்த்ரா முன்னதாக கொலம்பியா மாகாண    தலைமை தகவல் தொழில் நுட்ப அதிகாரியாக செயல்பட்டு 86 ஏஜென்சிக்களின் தொழில் நுட்ப ப்ராஜெக்ட்களையும் செலவினங்களையும் கவனித்தார்!

புதிய திட்டங்களை குறைந்த செலவில் தற்போது உள்ள அரசுத்துறைகளில் அமைப்பதும் பழைய பெரும் செலவு கொண்ட திட்டங்களை அகற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது!!

No comments:

Post a Comment