காதல் மேட்டர்ன்னாலே குஜால்தான்!! இந்த அஜால் குஜால் மேட்டரப் பத்தி தாடி வளர்க்கிற விஞ்சானிங்க ஆராய்ச்சியெல்லாம் பண்றானுங்க!
”ஆல்பா பாண்ட் சிக்மா பாண்ட்” ஆராய்ச்சிய விட்டுட்டு இவனுங்களுக்கு இந்த வேலை தேவையா நைனா?
இவனுங்க ஆராய்ச்சி செய்யப்போவ..... நானு தூக்கம் போயி இந்த மத்தியானம் 3.15க்கு ஒக்காந்து பொம்பளைங்க பூக்கட்டுற கண்க்கா எழுதினுகீறேன்!!! எல்லாம் நம்ப ஜொள்ளர் சங்க தோழர்களுக்குதான்!!!.....
அதுவும் நீயும் தூங்காத ஒக்காந்து, பதிவு வந்தவுடனே கபால்னு புடிச்சி பின்னூட்டமா குத்தித் தள்ளுறியே தோழா!! உன்னிய ஏமாத்தலாமா நானு!!!
தூங்கினா மேட்டர் சூடு ஆறிப்பூடுமே!! அதான் !! ரெண்டு வார்த்தை சொல்லிடுறேன்!!!
கனடாக்கார விஞ்சானிங்களும், ஹாலந்து கெழவன்களும் சேந்து பண்ணிய ஆராய்ச்சியாம் இது!
115 கல்லூரி மாணவர்களை அழகிய நடிகைகளிடம் பேச விட்டு இருக்கிறார்கள்!!! இதில் ஆண் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் ? எவ்வளவு நேரம் முகத்தைப் பார்க்கிறார்கள் ? நடிகைகளின் கண்களை எவ்வளவு நேரம் நெருக்கு நேர் பார்க்கிறார்கள் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்!( நம்ம ஊரு ஆராய்ச்சியாளர்களும் இப்படி ஆராய்ச்சி பண்ணலாமே!!! இளைஞர்கள் நாங்கள் ரெடி!!
நம்ம முதியோர் சங்கம் கூட ரெடியாம்பா!!!).
அதில் பல சுவாரசியமான முடிவுகள்!! அதாவது ஆராய்ச்சிக்குப்பின்னாடி எல்லா மாணவர்களிடமும் கேள்வியும் கேட்டு பதிலும் வாங்கி இருக்காங்க!
அதில் பெண்கள் ஆண்களைப்பார்த்தவுடன் மயங்குவது இல்லையாம்! ரொம்ப யோசிக்கிறாங்களாம்!!!
இப்படி யோசிச்சு யோசிச்சே பல பேரை ப்ளாக் கவிஞர்களாக மாத்தீட்டீங்களே பெண்களே!!! இது ஞாயமா?.. (ஃபிகர் மடக்கும் மக்கள் கவனிக்கவும்!)
இதற்காக ரகசிய கேமரா வைத்து ஆராய்ச்சி பண்ணி ஒவ்வொரு பெண் ஆண்களின் கண்ணசைவுகளையும் முக மாறுதலகள் எவ்வளவு பேரை நேருக்கு நேர் பார்க்கிறார்கள் என்று எல்லா விபரங்களையும் பதிவு செய்துள்ளார்கள்!!
பெண்கள் ஆண் நடிகர்களை, மாடல்களைப் பார்த்தாலும் டேடிங் போக விருப்பமா,காதலிக்க விருப்பமா என்று கேட்ட போது குழம்பியிருந்தார்கள்!!!
தேவயில்லாத கர்ப்பம், இவன் கைவிட்டுவிடுவானோ என்ற பயம் (அங்கேயுமா?) இருக்கிறதாம்!!
( இன்னா இது!! எங்கே போனாலும் இதே பேஜாரா? என்று நம் சங்கத்து சிங்கங்கள் கொதிப்பது கேட்கிறது!! கூல்!!கூல்!! என்ன செய்வது! இவ்வளவு இடர்களையும் தாண்டி கடலை உடைத்து, கரெக்ட் பண்றது எவ்வளவு கஷ்டம்!!)
பொம்பளைங்க இப்படி இருக்கிறார்களே!!
நம்ப பசங்க!! (ஏக் மால் தோ துக்கடா!) வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு!! கதைதான்!!
4 வினாடி ஒரு நடிகை கண்ணை ப்பார்த்துட்டு வேற நடிகை இப்பிடி அலைபாய்ந்து எல்லா அழகையும் அள்ளிப்பருகின பசங்க செட்டில் ஆகலை!!!
8.2 வினாடி தொடர்ந்து ஒரு அழகியைப் பார்த்த பசங்க எல்லாம் கழண்டு ஒருமாதிரி ஆகி ஜோள்ளு விட ஆரம்பித்து இருக்கிறார்கள்! ( டேட்டிங் போக ரெடியாம்!! கூத்தைப் பாருங்கப்பா! எவ்வளவு நல்ல பசங்க!! நம்ம பசங்க!!!)
ஆராய்ச்சி முடிவில் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்!!
எச்சரிக்கை: சங்கத் தோழா தொடர்ந்து 8.2 வினாடிக்கு மேல் பெண்களின் கண்களைப் பார்ப்பது ஆபத்து!!! பார்க்காதே!! பார்த்தே சிக்கிக்குவே மாப்பிள்ளே!!
8.2 வினாடிக்கு மேல் கண்ணோடு கண் நோக்கினால் ஆண் காதல் வசப்படுகிறான்!!(ராமனே இந்த லிஸ்டுதானே!-- அண்ண்லும் நோக்கினான் அவளும் நோக்கினான்!!!)....................அங்கே சரிதான்! இங்கே அவளுடைய அண்ணன்,தம்பி, அருவா அப்பன் ஆகியோர் நோக்காமப் பார்த்துக் கொள்ளுங்கள்!! பார்த்துட்டான்னா...நொங்கிருவானுங்க!!!
இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா? ஓகே...நடத்துங்க...
பி.கு: இதைப் படித்து ப்ரூப் பார்த்த தங்கமணி 4 வினாடிக்கு மேல் எந்த அம்மிணியையும் லுக் உடக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள்!!
கஷ்டப்பட்டு எழுதி சொந்த செலவுலே சூனியம் வச்சுக்கிட்ட கதையாப்போச்சு நம்ம கதை!!
No comments:
Post a Comment